அவ்வை சண்முகி | |
---|---|
இயக்கம் | கே.எஸ் ரவிக்குமார் |
தயாரிப்பு | அர்.கே ஹரி |
கதை | கிரேசி மோகன் |
இசை | தேவா |
நடிப்பு | கமல்ஹாசன் மீனா நாகேஷ் ஜெமினி கணேசன் மணிவண்ணன் நாசர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
வெளியீடு | 1996 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அவ்வை சண்முகி (Avvai Shanmughi) (1996) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மீனா, நாகேஷ், ஜெமினி கணேசன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.இத்திரைப்படம் ராபின் வில்லியம்ஸ் நடித்த மிசஸ் டவுட்ஃபயர் என்னும் ஆங்கிலப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது.[1]
இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வாலி இயற்றினார்.[2][3] ருக்கு ருக்கு என்னும் பாடலை கமல்ஹாசன் பெண் குரலில் பாடினார். வேல வேல என்னும் பாடல் வரிகளை வாலி எழுதினார். அப்பாடலில் சண்முகா உனது படைப்பில்… உயர்ந்து விளங்கும் பெண்ணய்யா… என்ற வரியில் அவ்வை சண்முகம் அவர்களின் நாடகக் குழுவில் சிறு வயதில் நடித்துப் பயிற்சி பெற்ற கமல்ஹாசனை குறித்துப் பொருள்வரும்படியும் எழுதியிருந்தார்.[4]
# | பாடல் | பாடகர்(கள்) | வரிகள் | நீளம் |
---|---|---|---|---|
1 | "ருக்கு ருக்கு" | கமல்ஹாசன், சுஜாதா மோகன் | வாலி | 5:55 |
2 | "காதலா காதலா" | ஹரிஹரன், சுஜாதா மோகன் | 5:46 | |
3 | "கல்யாணம் கச்சேரி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 5:30 | |
4 | "வேல வேல" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 5:26 | |
5 | "காதலி காதலி" | ஹரிஹரன் | 5:44 |