ஆக்சிசனேற்ற செல்லுலோசு (Oxidized cellulose) என்பது நீரில் கரையாத மரக்கூழ் வகை வழிப்பெறுதியாகும். இதை ஆக்சிசனேற்ற மரக்கூழ், ஆக்சிசனேற்ற மாவியம் என்ற பெயர்களாலும் அழைப்பர். குளோரின், ஐதரசன் பெராக்சைடு, பெர் அசிட்டிக் அமிலம், குளோரின் டை ஆக்சைடு, நைட்ரசன் டை ஆக்சைடு, பெர்சல்பேட்டுகள், பெர்மாங்கனேட்டு, டைகுரோமேட்டு-கந்தக அமிலம் ஐப்போகுளோரசு அமிலம், ஐப்போ ஆலைட்டுகள் அல்லது பெர் அயோடேட்டுகள் மற்றும் பல்வேறு உலோக வினையூக்கிகள் போன்ற ஆக்சிசனேற்ற முகவர்களின் செயல்பாட்டின் மூலம் செல்லுலோசிலிருந்து ஆக்சிசனேற்ற செல்லுலோசு தயாரிக்கப்படுகிறது. [1] தொடக்கப் பொருளான செல்லுலோசின் அசல் ஐதராக்சில் குழுக்களுடன் கூடுதலாக, ஆக்சிசனேற்றத்தின் தன்மை மற்றும் வினை நிலைகளைப் பொறுத்து ஆக்சிசனேற்றப்பட்ட செல்லுலோசில் கார்பாக்சிலிக் அமிலம், ஆல்டிகைடு மற்றும் கீட்டோன் போன்ற குழுக்கள் இருக்கலாம், [2]
இது ஒரு ரத்தக்கசிவு எதிர்ப்பு மருந்து ஆகும். [3] பருத்தி பந்து போல இரத்தத்தை உறிஞ்சுவதன் மூலமும் மற்றும் தொடர்பு செயல்படுத்தும் அமைப்பைத் தூண்டுவதன் மூலமும் ஆக்சிசனேற்ற செல்லுலோசு செயல்படுகிறது. இது மோசமான அளவுக்கு குறைந்த அளவு உறிஞ்சப்பட்டு, அறுவை சிகிச்சைக்குப் பின் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. [4]