ஆங் துவா ஜெயா (P137) மலேசிய மக்களவை தொகுதி மலாக்கா | |
---|---|
Hang Tuah Jaya (P137) Federal Constituency in Malacca | |
ஆங் துவா ஜெயா மக்களவைத் தொகுதி (P137 Hang Tuah Jaya) | |
மாவட்டம் | மத்திய மலாக்கா மாவட்டம் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 118,493 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | ஆங் துவா ஜெயா தொகுதி |
முக்கிய நகரங்கள் | பாச்சாங், பத்து பிரண்டாம் , புக்கிட் பாரு, கீசாங், டுரியான் துங்கல் |
பரப்பளவு | 116 ச.கி.மீ[3] |
முன்னாள் நடப்பிலுள்ள தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 2018 |
கட்சி | பாக்காத்தான் அரப்பான் |
மக்களவை உறுப்பினர் | அடாம் அட்லி அப்துல் அலிம் (Adam Adli Abd Halim) |
மக்கள் தொகை | 183,693[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2018 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
ஆங் துவா ஜெயா மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Hang Tuah Jaya; ஆங்கிலம்: Hang Tuah Jaya Federal Constituency; சீனம்: 汉都亚再也国会议席) என்பது மலேசியா, மலாக்கா மாநிலத்தின் மத்திய மலாக்கா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P137) ஆகும்.[5]
ஆங் துவா ஜெயா மக்களவைத் தொகுதி 2018-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2018-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
2018-ஆம் ஆண்டில் இருந்து ஆங் துவா ஜெயா மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
மத்திய மலாக்கா மாவட்டம் என்பது மலாக்கா மாநிலத்தில் மத்திய மலாக்கா மாவட்டம்; ஜாசின் மாவட்டம்; அலோர் காஜா மாவட்டம் ஆகிய மூன்று மாவட்டங்களில் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு புதிய மாவட்டம் ஆகும். ஆங் துவா ஜெயா மக்களவை தொகுதி 2018-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
ஆங் துவா ஜெயா நகரம் என்பது பொருளாதார, சமூக, உள்கட்டமைப்பு மற்றும் பொழுதுபோக்கு மேம்பாடுகளுடன், மலாக்கா மாநிலத்தின் நிர்வாக மையமாகவும்; அறிவார்ந்த மாநகரமாகவும், மலாக்கா அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது. இந்த நகரம் நிலத்தால் சூழப்பட்ட ஒரே நகராட்சியாகும்.[7]
ஆங் துவா ஜெயா புறநகர் நிலப்பகுதியின் பங்கு முக்கியமானது. ஏனெனில் மலாக்கா மாநில அரசின் நிர்வாக மையம் இந்த ஆங் துவா ஜெயா நகராட்சி நிர்வாகத்திற்குள் அமைந்துள்ளது.
ஆங் துவா ஜெயா மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (2018 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
2018-ஆம் ஆண்டில் ஆங் துவா ஜெயா தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
14-ஆவது மக்களவை | P137 | 2018–2022 | சம்சுல் இசுகந்தர் யுசுரி முகமட் அகின் (Shamsul Iskandar @ Yusre Mohd Akin) |
பாக்காத்தான் அரப்பான் (மக்கள் நீதிக் கட்சி) |
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | அடாம் அட்லி அப்துல் அலிம் (Adam Adli Abd Halim) |
மக்களவைத் தொகுதி | சட்டமன்றத் தொகுதி | ||||||
---|---|---|---|---|---|---|---|
1955–59* | 1959–1974 | 1974–1986 | 1986–1995 | 1995–2004 | 2004–2018 | 2018–இன்று வரையில் | |
ஆங் துவா ஜெயா | ஆயர் குரோ | ||||||
ஆயர் மோலேக் | |||||||
புக்கிட் கெட்டில் | |||||||
பெங்காலான் பத்து |
எண் | சட்டமன்றத் தொகுதி | உறுப்பினர் | கூட்டணி (கட்சி) |
---|---|---|---|
N15 | பெங்காலான் பத்து | கல்சோம் நூர்டின் | பாரிசான் நேசனல் (அம்னோ) |
N16 | ஆயர் குரோ | கெர் சி இயீ | பாக்காத்தான் அரப்பான் (ஜசெக) |
N17 | புக்கிட் கெட்டில் | அட்லி சகாரி | பாக்காத்தான் அரப்பான் (அமாணா) |
N18 | ஆயர் மோலேக் | ரகுமாட் மரிமான் | பாரிசான் நேசனல் (அம்னோ) |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
அடாம் அட்லி அப்துல் அலிம் (Adam Adli Abd Halim) | பாக்காத்தான் அரப்பான் | 39,418 | 41.72 | 9.29 ▼ | |
முகமட் ரிசுவான் முகமட் அலி (Mohd Ridhwan Mohd Ali) | பாரிசான் நேசனல் | 30,780 | 32.58 | 7.14 ▼ | |
முகமட் அசுருதீன் முகமட் இட்ரிஸ் (Mohd Azrudin Md Idris) | பெரிக்காத்தான் நேசனல் | 23,549 | 24.92 | 24.92 | |
செயிக் இக்சான் செயிக் சாலே (Sheikh Ikhzan Sheikh Salleh) | தாயக இயக்கம் | 739 | 0.78 | 0.78 | |
மொத்தம் | 94,486 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 94,486 | 98.84 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 1,106 | 1.16 | |||
மொத்த வாக்குகள் | 95,592 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 95,592 | 79.74 | 7.27 ▼ | ||
பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது | |||||
மூலம்: [9] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)