ஆசம் சா Azam Jah | |||||
---|---|---|---|---|---|
Azam Jah in 1937 | |||||
பிறப்பு | ஐதராபாத்து (இந்தியா), ஐதராபாத் இராச்சியம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு (தற்கால தெலங்காணா, இந்தியா) | 22 பெப்ரவரி 1907||||
இறப்பு | 7 அக்டோபர் 1970 | (அகவை 63)||||
துணைவர் | துருசேவர் சுல்தான் (தி. 1931; divorce 1954) | ||||
| |||||
தந்தை | ஓசுமான் அலி கான் | ||||
தாய் | சாகேப்சாதி அசமுன்னிசா பேகம் (துல்கான் பாட்சா பேகம்)[1] |
சாகேப்சாதா மிர் இமாயத் அலி கான் சித்திக் ஆசம் சா (Sahebzada Mir Himayat Ali Khan Siddiqi Azam Jah) (22 பிப்ரவரி 1907 - 9 அக்டோபர் 1970) ஐதராபாத் இராச்சியத்தின் கடைசி நிசாம் ஓசுமான் அலி கான் மற்றும் அவரது மனைவி ஆசம் உன்னிசா பேகம் ஆகியோரின் மூத்த மகன் ஆவார்.
1936 ஆம் ஆண்டில், இவருக்கு பேரரின் இளவரசர் என்ற பட்ட்டம் வழங்கப்பட்டது. ஐதராபாத் இராச்சியத்தின் வடக்கில் இருந்த மாகாணம் ஆகும். பின்னர் ஆங்கிலேயர்களுக்கு நிரந்தரமாக குத்தகைக்கு விடப்பட்டு அவர்களால் நிர்வகிக்கப்பட்டது.[2]
1931 ஆம் ஆண்டில் ஆசம் சா, ஓசுமான் இல்லத்தின் உறுப்பினரும் (முன்னர் உதுமானியப் பேரரசு), கடைசி உதுமானிய கலீபாவான இவர், உதுமானிய கலீபகத்தின் கடைசி கலீபா இரண்டாம் அப்துல்மசித்தின் ஒரே மகளான துருசேவர் சுல்தானை 1932 நவம்பர் 12 அன்று நீஸ் நகரில் மணந்தார். [3][4][5] [6] திருமணத்திற்கு பல்வேறு இந்திய இளவரசர்ளும் வந்திருந்தனர்.[3] [6] [7]இரண்டு மகன்களைப் பெற்ற பிறகு 1954 ஆம் ஆண்டில் தம்பதியினர் மணமுறிவு பெற்றனர்.
இவர் ஐதராபாத்தில் உள்ள உசேன் சாகர் அருகேயுள்ள பெல்லா விஸ்டா என்ற 10 ஏக்கர் (40,000 சதுர மீட்டர்) பரப்பளவில் உள்ள அரண்மனையில்[8][9] வசித்து வந்தார்.
இலண்டன் மத்திய மசூதி என்று இப்போது அழைக்கப்படும் நிசாமியா பள்ளிவாசலுக்கு ஆசப் சா நன்கொடை அளித்தார். ஜூன் 4,1937 வெள்ளிக்கிழமை அடிக்கல் சூட்டப்பட்டது.[10][11]