ஆசிய நெடுஞ்சாலை 15 அல்லது ஏஎச்15 (AH15), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். வியட்நாம் நாட்டின் வின் என்னும் இடத்தில் தொடங்கி தாய்லாந்தின் உடோன் தானி என்னும் இடம் வரை செல்லும் இந்த நெடுஞ்சாலை, ஆசியாக் கண்டத்தைச் சேர்ந்த 3 நாடுகளூடாகச் செல்கிறது. இதன் மொத்த நீளம் 2.077 கிலோமீட்டர்.
ஏஎச்1 நெடுஞ்சாலையை வியட்நாமின் வின்னில் சந்திக்கும் இந்தச்சாலை, ஏஎச்12 ஐ உடோன் தானியில் சந்திக்கிறது. இது ஏஎச்11 ஐ வெட்டிச் செல்கிறது.
இந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.