ஆசிய நெடுஞ்சாலை 44 அல்லது ஏஎச்44 (AH44), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். இலங்கையின் தம்புல்லை என்னும் இடத்தில் தொடங்கி இலங்கையின் கிழக்குக் கரையோர நகரமான திருகோணமலை என்னும் இடம் வரை செல்லும் இந்த நெடுஞ்சாலை இலங்கைத் தீவுக்குள்ளேயே அடங்கிவிடுகிறது. இதன் மொத்த நீளம் 107 கிலோமீட்டர்.
ஏஎச்43 நெடுஞ்சாலையை தம்புல்ல என்னுமிடத்தில் இச் சாலை சந்திக்கிறது.
இந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.