ஆசிய நெடுஞ்சாலை 5 அல்லது ஏஎச்5 (AH5), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். சீனாவில் உள்ள சாங்காய் நகரில் இருந்து துருக்கிக்கும் பல்கேரியாவுக்கும் இடையிலான எல்லை வரை செல்லும் இது, ஆசியாக் கண்டத்தைச் சேர்ந்த 8 நாடுகளூடாகச் செல்கிறது. இதன் மொத்த நீளம் 10,380 கிலோமீட்டர்.
இந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.