" ஆசிரியர் பார்வை" (Teacher look) என்பது உணர்ச்சியற்ற, பாவனையற்ற முறைத்துப் பார்ப்பதனைக் குறிப்பதாகும். தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு தவறாக நடந்து கொள்ளும் மாணவர்களை கத்துவதற்கு அல்லது அச்சுறுத்துவதற்கு மாற்றாக இவை கற்றுக்கொடுக்கப்படுகிறது. [1] [2] வகுப்பில் உள்ள மற்ற மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுவதைக் குறைக்கும் அதே வேளையில், எளிய இடையூறுகள் பெரியதாகாமல் தடுப்பதே ஆசிரியர் முறைத்துப் பார்ப்பதின் நோக்கமாகும். இளம் மற்றும் இணக்கமான மாணவர்களிடம் இவ்வாறான பார்வைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர். [3]
நன்றாக நடந்துகொள்ளும் மாணவர்களுக்கு நன்றி தெரிவித்தல், தவறாக நடந்துகொள்ளும் மாணவர்களை பெயர் சொல்லி அழைப்பது, இடையூறு ஏற்படுத்தும் மாணவர்களுக்கு அருகில் செல்வது மற்றும் செய்யும் தவறுகளை அன்பாக அவர்களுக்கு நினைவூட்டுதல் ஆகியவை சிறிய தவறுகளை கையாளும் முறைகளாக கற்றுக்கொடுக்கப்படுகிறது.[4]
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link)