இவர் 1970 இல் உரோம் நகரில் உரோம் பல்கலைக்கழகத்தில் தன் இயற்பியல் முதுவர் பட்டத்தைப் பெற்றார். பின்னர் இந்நகரிலேயே தன் வாழ்நாள் முழுவதும் ஆய்வாளராகப் பணிபுரிந்தார். இவர் முதலில் பல்கலைக்கழகத்திலும் பிறகு 1975 முதல் இத்தாலி தேசிய ஆராய்ச்சி மன்றத்திலும் இறுதியாக இத்தாலியத் தேசிய வானியற்பியல் நிறுவனத்திலும் ஆய்வாளராக விளங்கினார்.[3]
1970 முதல் 1974 வரை நாசாவின் கோள், நிலா ஆராய்ச்சித் திட்ட இணை ஆய்வாளராக இருந்தார்.
1991 முதல் 2011 வரை சிர்சு ,விம்சு கருவிகளை உருவாக்கும் அறிவியல் குழு உறுப்பினராகவும் விம்சு கட்புல அலைவரிசை, காசினி-ஐகன்சு திட்டம் ஆகியவற்ரின் முதன்மை அய்வாள்ராகவும் இருந்து வந்துள்ளார்.[4]
1993 முதல் 1996 வரை மோரோ எனும் நிலா வட்டணைக்கல முன்மொழிவின் ஒருங்கிணைப்பாளராகவும் மோரோ அறிவியல் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.
1994 முதல் 1996 வரை ஐரோப்பிய விண்வெளி முகமை, அகச்சிவப்புக் கதிர் ந்க்கீட்டகத் திட்ட நோக்கீட்டுக் கால ஒதுக்கீட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக விளங்கினார்.[5]
1997 முதல் 1999 வரை ஐரோப்பியத் தெற்கு நோக்கீட்டக நோக்கீட்டுத் திட்டக் குழு எஃப் பலக உறுப்பினராக இருந்தார்;[5]
1999 முதல்2004 வரை பின்லாந்து விண்வெளி ஆய்வுக் கல்விக்கழகத்தின் அறிவியல் மன்ற உறுப்பினராக இருந்தார் .[5]
1999 முதல் 2004 வரை பின்லாந்து விண்வெளி ஆய்வுக் கல்விக்கழக அறிவியல் மன்றத்தின் உறுப்பினராக இருந்தார் .[5]
1999 முதல் 2002 வரை பெர்ன் நகரைத் தலைமையகமாக்க் கொண்ட பன்னாட்டு விண்வெளி ஆய்வு நிறுவன அறிவியல் மன்றத்தில் உறுப்பினராக இருந்தார் (1999–2002);[6]
2008 முதல் 2011 வரை ஐரோப்பிய குழுமத்தின் விண்வெளி அறிவுரைஞர் குழுவின் உறுப்பினராக இருந்தார்.
இவர் பாரீசு நோக்கீட்டக உயர் அறிவியல் குழுவின் உறுப்பினராக இருந்தார்.[7]
இவர் 2005 முதல் 2011 வரை நாசாவின் வியாழனுக்கான புதிய முன்முகப்பு ஜிராம் கருவித் திட்ட முதன்மை ஆய்வாள்ராக விளங்கினார்.[8]
2007 இல் டேவிடு பேட்சு பதக்கத்தைப் பெற்றார். இப்பதக்கம் இவருக்குச் சூரியக் குடும்ப உருவாக்கம், கோள் அறிவியல், விண்வெளித் தேட்டத்துக்கான அகச்சிவப்புக் கருவி உருவாக்கம் ஆகிய புலங்களில் இவர் ஆற்றிய அகல்விரிவும் ஆழமும் மிக்க பணிகளுக்காகவும் சிறப்பாகத் தலைமைதாங்கியதற்காகவும் வழங்கப்பட்டது. ;[9]
2012 இல் ழீன் தொமினிக் காசினி பதக்கம் பெற்று தகமைசால் ஆய்வுறுப்பினர் ஆனார்.[10]
2012 இல் நாசாவின் தகவுறு பொதுச் சேவைப் பதக்கத்தையும் பெற்றார்.[11]
வெசுட்டாவில் உள்ள ஆஞ்சியோலெட்டா குழிப்பள்ளம் இவரது பெயரால் வழங்க 2014 இல் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.[12]
134340 புளூட்டொவில் உள்ள கரோதினி குழிப்பள்ளமும் 2018 இல் இருந்து இவரது பெயரால் வழங்கப்படுகிறது.