ஆடு புலி ஆட்டம் | |
---|---|
இயக்கம் | எஸ். பி. முத்துராமன் |
தயாரிப்பு | எம். சாந்தி நாராயணன் (சொர்ணாம்பிகா புரொடக்சன்) |
கதை | மகேந்திரன் |
திரைக்கதை | எஸ். பி. முத்துராமன் |
வசனம் | மகேந்திரன் |
இசை | விஜய பாஸ்கர் |
நடிப்பு | கமல்ஹாசன் ஸ்ரீபிரியா ரசினிகாந்த் |
ஒளிப்பதிவு | பாபு |
படத்தொகுப்பு | ஆர். விட்டால் |
வெளியீடு | செப்டம்பர் 30, 1977 |
நீளம் | 3947 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆடு புலி ஆட்டம் (Aadu Puli Attam) 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா, ரசினிகாந்த் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் 'எத்துக்கு பை எத்து' எனும் பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியானது. அல்லு ராமலிங்கம் மற்றும் கைகால சத்யநாராயணா நடிப்பில் சில காட்சிகள் இத்திரைப்படத்தில் இணைக்கப்பட்டு பின் தெலுங்கில் வெளியானது.
இப்படத்திற்கு கதை மற்றும் வசனம் இயக்குநர் மகேந்திரன் எழுதியுள்ளார்.[3] 'உறவே புதுமை நினைவே இளமை' என்ற பாடல் குன்றத்தூர், திருநீர்மலை போன்ற இடங்களில் படமாக்கப்பட்டது. சாந்தி நாராயணன் தயாரித்த இத்திரைப்படம் வெற்றியடைந்தது.[4]
இசையமைப்பாளர் விஜய பாஸ்கர் படத்திற்கு இசையமைத்தார். [5][6] கண்ணதாசன், பஞ்சு அருணாசலம், மற்றும் பூவை செங்குட்டுவன் ஆகியோர் பாடல் வரிகளை எழுதினர். [7][8]
எண். | பாடல் | பாடகர்கள் | நீளம் |
---|---|---|---|
1 | "உறவோ புதுமை" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:13 |
2 | "வானுக்கு தந்தை எவனோ" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எல். ஆர். அஞ்சலி | 4:22 |
3 | "மணமே சோலையா" | வாணி ஜெயராம் | 4:21 |
4 | "பூங்குயில் பாடுது" | வாணி ஜெயராம் | 2:58 |