ஆண்டர்சன் மலை ஓணான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | ஜபாலுரா கிரே, 1853
|
இனம்: | ஜ. ஆண்டர்சோனியா
|
இருசொற் பெயரீடு | |
ஜபாலுரா ஆண்டர்சோனியா அன்னண்டேலு, 1905 |
ஆண்டர்சன் மலை ஓணான் என்பது ஜபாலுரா ஆண்டர்சோனியா (Japalura andersoniana) அகாமிடே குடும்பத்தில் ஜபாலுரா பேரினப் பல்லி சிற்றினமாகும். இந்தச் சிற்றினம் தெற்கு ஆசியாவினைத் தாயகமாகக் கொண்டது.
இசுக்கொட்லாந்தின் விலங்கியல் நிபுணர் ஜான் ஆண்டர்சன் நினைவாக இந்த சிற்றினப் பெயர் ஆண்டர்சோனியா என்று அழைக்கப்படுகிறது.[1]
ஜ. ஆண்டர்சோனியா கிழக்கு இந்தியாவிலும், முன்பு திபெத் என்று அழைக்கப்பட்ட தென்மேற்கு சீனா பகுதியிலும் காணப்படுகிறது.[2]
ஜ. ஆண்டர்சோனியாவின் உடல் நீளம் 16 செ.மீ. வரை வளரக்கூடியது. இது முதுகுப்புறத்திலிருந்து வயிற்றுப்புறமாக பழுப்பு நிறத்தில் காணப்படும். ஆண் ஓணான் மஞ்சள் நிற அலைதாடியினைக் கொண்டிருக்கும்.[3]
ஜ. ஆண்டர்சோனியா முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யக்கூடியது.[2]