ஆண்ட்ரியா ஐவரி Andrea Ivory | |
---|---|
படித்த கல்வி நிறுவனங்கள் | பாரி பல்கலைக்கழகம் |
பணி | கல்வியாளர் |
ஆண்ட்ரியா ஐவரி (Andrea Ivory) அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு கல்வியாளர் ஆவார். பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் இதய ஆரோக்கியத்திற்கான விருது பெற்ற ஊக்குவிப்பாளராக செயல்பட்டு வருகிறார்.
ஐவரிக்கு 2004 ஆம் ஆண்டில் மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. சிகிச்சை பெற்று பூரண குணமடைந்த பிறகு தன்னைப் போன்ற பெண்களுக்கு இவர் உதவ விரும்பினார். [1] [2] இதற்காக பெண்கள் மார்பகப்புற்று நோய் மற்றும் இதய முன்முயற்சி என்ற அமைப்பை 2005 ஆம் ஆண்டில் ஐவரி நிறுவினார். இந்த அமைப்பு மார்பகப் புற்றுநோய் மற்றும் இதய நோய்களை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் சிகிச்சையை ஊக்குவித்தலை நோக்கமாகக் கொண்டிருந்தது. குறிப்பாக சமூக பொருளாதார ரீதியாக பின்தங்கிய அமெரிக்க பெண்களிடையே கவனம் செலுத்தியது.[3]
2006 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் முதல் பிரச்சாரத்தின் போது, பிரதிநிதிகள் தெற்கு புளோரிடாவில் 70,000 வீடுகளில் வீடு வீடாக பிரச்சாரம் செய்தனர். மற்ற சுற்றுப்புறங்களில் வசிக்கும் பெண்களுக்கு இந்த அமைப்பு பரிந்துரைகளை வழங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் அமைப்பின் மூலம் ஆபத்தில் இருக்கும் 500 பேருக்கும் மேற்பட்ட பெண்கள் சேவைகளைப் பெறுகின்றனர். [4]
2013 ஆம் ஆண்டில், பெண்களின் மார்பக மற்றும் இதய முன்முயற்சி அமைப்பு இதய நோய் மற்றும் மார்பக புற்றுநோயின் சிக்கல்களைச் சமாளிக்கத் தொடங்கியது.[3] அமைப்பினர் வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு மற்றும் கல்வியை அளித்தனர். ஊட்டச்சத்து வகுப்புகள் மற்றும் செயல்முறை அமர்வுகள் நடத்தப்பட்டன. பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் பரிசோதனை மற்றும் பராமரிப்பு ஒருங்கிணைப்பு ஆகியவற்றை வழங்கினர்.[1] [5]
மியாமி-டேட் மாகாணத்தில் உள்ள இயாக்சன் சுகாதார மையத்துடன் இணைந்து மேமோகிராம்கள், கொழுப்பு சோதனைகள் மற்றும் இரத்த அழுத்த பரிசோதனைகளை இவ்வமைப்பினர் மேற்கொள்கின்றனர். [4]
2013 ஆம் ஆண்டில் ஐவரி பாரி பல்கலைக்கழகத்தின் தொழில்முறை மற்றும் தொழில் கல்விப் பள்ளியில் இருந்து குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவராக இவர் பட்டம் பெற்றார். [2] பெண்கள் மார்பகப்புற்று நோய் மற்றும் இதய முன்முயற்சி என்ற அமைப்பை நிறுவியதைத் தவிர, ஐவரி அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின் 2 ஆவது உச்சி மாநாடு மற்றும் வாசிங்டன், டிசி யில் அமைந்துள்ள தேசிய மார்பக புற்றுநோய் கூட்டணியின் வழிகாட்டல் மாநாடுகளில் ஒரு பிரதிநிதியாகவும் இவர் இருந்துள்ளார். [2]
சி.என்.என். அமைப்பின் 10 சிறந்த பெண்மணிகள் பட்டியலில் ஒருவராகத் ஐவரி தேர்ந்தெடுக்கப்பட்டார். இராபர்ட்டு வுட் இயான்சன் அறக்கட்டளையின் சமூக நலத் தலைவர் விருது வழங்கப்பட்டும் சிறப்பிக்கப்பட்டார்.[2]