ஆதஜ்யா | |
---|---|
இயக்கம் | சாந்த்வானா பர்டோலோய் |
தயாரிப்பு | சாந்த்வானா பர்டோலோய் |
கதை | சாந்த்வானா பர்டோலோய் இந்திரா கோசுவாமி (புதினம்) |
நடிப்பு | டாம் ஆல்டர் திரிசா சைகியா |
ஒளிப்பதிவு | மிருணாள்காந்தி தாஸ் |
படத்தொகுப்பு | ஏ. சிறீகர் பிரசாத் |
வெளியீடு | 1996 |
ஓட்டம் | 93 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | அசாம் |
ஆதஜ்யா (Adajya-மொ.பெ. வானூர்தி) என்பது 1996ஆம் ஆண்டு இந்திரா கோஸ்வாமியின் தோண்டால் காதிர் உய்யே கோவா கவுடா என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு சந்த்வானா பர்டோலோய் இயக்கிய இந்திய அசாமி மொழி நாடகத் திரைப்படமாகும்.[1] இந்தப் படம் பல பன்னாட்டுத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது.[2]
இந்தப் படம் 1940களின் அசாமில் நடப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. சட்டம், பழக்கவழக்கங்களால் கட்டாயப்படுத்தப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், மூன்று விதவைகள் கண்ணியமான வாழ்க்கையை நடத்தப் போராடுகிறார்கள். ஓர் இளம் அமெரிக்க அறிஞரின் வருகை, ஒரு விசப் பாம்புக் கடி, மூதாதையர் நகைகள் திருடப்பட்டது ஆகியவை இளம் மற்றும் அழகான விதவை கிரிபாலாவின் நிலைமையை ஒரு வேதனையான நெருக்கடிக்குக் கொண்டுவருகின்றது.[3]