ஆதம் பாவ்சி Adham Fawzy | |
---|---|
நாடு | எகிப்து |
பிறப்பு | 2000 |
பட்டம் | கிராண்டு மாசுட்டர் (2019) |
பிடே தரவுகோள் | 2477 (திசம்பர் 2021) |
உச்சத் தரவுகோள் | 2523 (சூன் 2023) |
ஆதம் பாவ்சி (Adham Fawzy) எகிப்திய நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க வீரர் ஆவார். 2000 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். 2019 ஆம் ஆதம் பாவ்சிற்கு கிராண்ட்மாசுட்டர் பட்டத்தை பிடே அமைப்பு இவருக்கு வழங்கியது. 2023 ஆம் ஆண்டு மே மாத நிலவரப்படி, இவர் எகிப்து நாட்டின் மூன்றாவது அதிக எலோபுள்ளிகள் கொண்ட சதுரங்க வீரராகவும் ஆப்பிரிக்க கண்டத்தில் நான்காவது அதிக புள்ளிகள் கொண்ட சதுரங்க வீரராகவும் திகழ்ந்தார்.[1]
2018[2][3] மற்றும் 2019 [4] ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆப்பிரிக்க இளையோர்ர் சதுரங்க வெற்றியாளர் போட்டிகளை ஆதம் பாவ்சி வென்றார்.
2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆப்பிரிக்க சதுரங்க வெற்றியாளர் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.[5] 2021 ஆம் ஆண்டு சதுரங்க உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றார். 2023 ஆம் ஆண்டுக்கான ஆப்பிரிக்க சதுரங்க வெற்றியாளர் போட்டியை வென்றார்.[6]
2023 ஆம் ஆண்டு அசர்பைசான் நாட்டின் பக்கூ நகரில் நடைபெற்ற சதுரங்க உலகக் கோப்பை போட்டியில் விளையாடினார்.