ஆத்தி

ஆத்தி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
Fabales
குடும்பம்:
பேரினம்:
ஆத்தி
இனம்:
B. racemosum
இருசொற் பெயரீடு
Bauhinia racemosa
Lam.
வேறு பெயர்கள்
  • Bauhinia parviflora Vahl
  • Piliostigma racemosum (Lam.) Benth.
  • Piliostigma racemosa (Lam.) Benth.

ஆத்தி (Bauhinia racemosa) என்பது ஒரு சிறிய, அடர்த்தியான மரமாகும். சீசல்பீனியேசியே (Caesalpiniaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த இதன் கிளைகள் தொங்கும் அமைப்பில் இருக்கும். இது கடல் மட்டத்தில் இருந்து 1650 மீட்டர் வரை உயரமான இடங்களில் இந்தியா எங்கும் காணப்படுவதுடன், இலங்கை, சீனா, திமோர் ஆகிய நாடுகளிலும் இது பரவலாக உள்ளது. இம் மரத்தின் பட்டை, தலைவலி, காய்ச்சல், தோல் வியாதிகள், கட்டி, இரத்த நோய்கள், வயிற்றுப்போக்கு போன்ற நோய்களை கட்டுப்படுத்துவதற்காக உள்ளூர் மக்களால் பயன்படுத்தப்படுகின்றது. இது நுண்ணுயிரெதிர்ப்புப் பொருட்களுக்கான மூலமாகப் பயன்படக்கூடும் எனவும் ஆய்வுகள் காட்டுகின்றன.[1] இந்தியாவின் சில பகுதிகளில் இதன் இலை பீடி சுற்றுவதற்குப் பயன்படுகிறது.

ஆத்தி மலர்

[தொகு]
  • சிவபெருமான் ஆத்திப்பூவை சூடுவதால் ஆத்திச்சூடி எனப் போற்றப்படுகிறார். இது இங்குக் காட்டப்பட்டுள்ள பூ
  • சோழவேந்தரின் குடிப்பூ 'ஆர்'. இதனையும் ஆத்தி என்பர்.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. ஆர். எஸ். குமாரும் மற்றவர்களும், ஜூலை 2005.

உசாத்துணைகள்

[தொகு]
  • ஆர். எஸ். குமார்; டி. சிவகுமார்; ஆர். எஸ். சுந்தரம்; எம். குப்தா; யூ. கே. மஜும்தார்; பி. கோமதி; வை. ராஜேஸ்வர்; எஸ். சரவணன்; எம். எஸ். குமார்; கே. முருகேஷ்; கே. ஏ. குமார், Antioxidant and antimicrobial activities of Bauhinia racemosa L. stem bark, Brazilian Journal of Medical and Biological Research, ஜூலை 2005, தொகுதி 38(7), பக் 1015–1024. (ஆங்கில மொழியில்)
  • Santapau, H., Common Trees, National Book Trust, India, New Delhi, ஏழாம் பதிப்பு 1999 (முதல் பதிப்பு 1966). (ஆங்கில மொழியில்)