ஆத்திரேலிய விலங்கியல் ஆய்விதழ்

ஆத்திரேலிய விலங்கியல் ஆய்விதழ்
Australian Journal of Zoology
 
Australian Journal of Zoology.jpg
சுருக்கமான பெயர்(கள்) Aust. J. Zool.
துறை Zoology
மொழி ஆங்கிலம்
பொறுப்பாசிரியர்: பால் கூப்பர்
வெளியீட்டு விவரங்கள்
பதிப்பகம் CSIRO Publishing (ஆத்திரேலியா)
வரலாறு 1953–முதல்
வெளியீட்டு இடைவெளி: இருமாதங்களுக்கு ஒருமுறை
தாக்க காரணி 1.00 (2019)
குறியிடல்
ISSN 0004-959X (அச்சு)
1446-5698 (இணையம்)
இணைப்புகள்

ஆத்திரேலிய விலங்கியல் ஆய்விதழ் (Australian Journal of Zoology) என்பது சி.எஸ்.ஐ.ஆர்.ஓ பதிப்பக வெளியீடான, ஒரு சர்வதேச சக மதிப்பாய்வு செய்யப்பட்ட அறிவியல் ஆய்விதழ் ஆகும். இது ஆத்திரேலிய விலங்கினங்களில் சிறப்புக் கவனம் செலுத்திச் செய்யப்பட்ட விலங்கியல் ஆய்வு குறித்த ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் மதிப்பாய்வுக் கட்டுரைகளை வெளியிடுகிறது. மேலும் விலங்கியலின் உட்பட துறைகளான உடற்கூறியல், உடலியல், மூலக்கூறு உயிரியல், மரபியல், இனப்பெருக்க உயிரியல், வளர்ச்சி உயிரியல், ஒட்டுண்ணியியல், உருவியலையும், நடத்தை, சூழலியல், விலங்கினப் புவிபரவல், உயிரியல் அமைப்புமுறை மற்றும் பரிணாமம் முதலியவற்றில் மேற்கொள்ளப்படும் ஆய்வின் முடிவுகளை வெளியிடுகிறது.

இந்த ஆய்விதழின் தற்போதைய தொகுப்பு ஆசிரியராகப் பால் கூப்பர் (ஆத்திரேலிய தேசிய பல்கலைக்கழகம்) உள்ளார்.

சுருக்கம் மற்றும் அட்டவணைப்படுத்தல்

[தொகு]

அக்ரிகோலா, எல்சேவியர் பயோபேஸ், உயிரியல் சுருக்கங்கள், பயாசிஸ், சிஏபி சுருக்கங்கள், வேதியியல் சுருக்கங்கள், தற்போதைய பொருளடக்கம் (வேளாண்மை, உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல்), அறிவியல் மேற்கோள் அட்டவணை, ஸ்கோபஸ் மற்றும் விலங்கியல் பதிவில் இந்த ஆய்விதழில் வெளியிடப்படும் ஆய்வுக் கட்டுரைகளின் சுருக்கம் அட்டவணைப்படுத்தப்படுகின்றன.

தாக்க காரணி

[தொகு]

ஆய்விதழ் மேற்கோள் அறிக்கைகளின்படி, பத்திரிகை 2019இன் தாக்கக் காரணி 1.00 ஆகும்.[1]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]