ஆத்திரேலிய விலங்குவள தகவல் தொகுதி (Australian Faunal Directory) என்பது ஆத்திரேலியாவில் காணப்படும் அனைத்து விலங்கு இனங்களின் வகைபாட்டியல் மற்றும் உயிரியல் தகவல்களின் இணையவழிப் பட்டியல் ஆகும்.[1][2] இது ஆத்திரேலியா அரசாங்கத்தின் வளங்குன்றா மேலாண்மை, சுற்றுச்சூழல், நீர், மக்கள் தொகை மற்றும் சமூகங்கள் துறையின் திட்டமாகும். மே 12, 2021க்குள், ஆத்திரேலிய விலங்கின தகவல் தொகுதியில் 126,442 சிற்றினங்கள் மற்றும் துணையினங்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.[2] இது ஆத்திரேலியாவின் நிறுத்தப்பட்ட விலங்கியல் பட்டியலின் தரவுகளையும் உள்ளடக்கியது.[3] மேலும் இது தொடர்ந்து குறிப்பிட்ட காலப்பகுதியில் புதுப்பிக்கப்படுகிறது.[4] 1980களில் தொடங்கப்பட்டது, இது "நிலவாழ் முதுகெலும்புகள், எறும்புகள் மற்றும் கடல் விலங்கினங்கள் உட்பட அனைத்து ஆத்திரேலிய விலங்கினங்களின் பட்டியலையும்" தொகுத்து, "ஆத்திரேலிய உயிரியவகைப்பாட்டியல் தகவலமைப்பை" உருவாக்குவது இதனுடைய இலக்குகளில் ஒன்றாக நிர்ணயித்துள்ளது.[5]