ஆந்தார் (Andar) என்பவர்கள் கில்ஜி பஷ்தூன் துணை பழங்குடியினர். கசுனிக்கு தெற்கே உள்ள சல்கர் மாவட்டத்தின் முழு பகுதியையும் இவர்கள் பரவியுள்ளனர். [1] இவர்கள் பாரம்பரியமாக நிலத்தடி நீர்ப்பாசன அமைப்புகள், கட்டுமானம் மற்றும் பராமரிப்பில் அவர்களின் திறமைக்காக அறியப்பட்டார்கள்.[2] கசுனி மாகாணத்தில் அதிக அளவில் குவிந்துள்ளதால், இவர்கள் பாக்டியாவிலும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர். 19 ஆம் நூற்றாண்டின் போது இவர்கள் கில்ஜிகளின் கிளர்ச்சியில் இணைந்தனர். மேலும் பலர் சிலகாலம் நாடுகடத்தப்பட்டனர்.சோவியத்–ஆப்கான் போரின் போது, அரகாத்-இ இசுலாமி கட்சியுடன் சிறிது காலம் இவர்கள் தங்களை இணைத்துக் கொண்டனர்.[3]