ஆனந்த்-மிலிந்த் | |
---|---|
![]() | |
பிறப்பு | மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
பணி | இசையமைப்பாளர்கள் |
செயற்பாட்டுக் காலம் | 1983–தற்போது வரை |
ஆனந்த் மற்றும் மிலிந்த் சிறீவத்சவா (Anand and Milind Srivastava) இரட்டையர்களான் இவர்கள் இந்தி மொழித் திரைப்படத்துறையில் பணிபுரிந்து வருகிறார்கள். இசையமைப்பாளர் சித்ரகுப்த் என்பவருக்கு மகன்களாகப் பிறந்த இவர்கள் 200க்கும் மேற்பட்ட பாலிவுட் படங்களுக்கு இசையமைத்துள்ளனர். சகோதரர்கள் 1984 இல் அப் ஆயேகா மாசா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்கள். பின்னர், 1988 இல் வெளியான கயாமத் சே கயாமத் தக் திரைப்படம் மூலம் பெரும் முன்னேற்றம் அடைந்தனர்.[1] எ ரெபெல் பார் லவ் படத்திற்கும் இவர்கள் இசையமைத்துள்ளனர்.[2]