ஆனந்து கீத்தே | |
---|---|
ஆனந்து கீத்தே | |
கனரக தொழிற்சாலை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான அமைச்சர் | |
பிரதமர் | நரேந்திர மோதி |
தொகுதி | ராய்காட் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 2 சூன் 1951 மும்பை, மகாராட்டிரம் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | சிவ சேனா |
துணைவர் | அசுவினி கீத்தே |
வாழிடம் | மும்பை |
As of மே, 2014 மூலம்: [1] |
ஆனந்த் கங்காராம் கீதே (Anant Geete) மத்திய கனரக தொழிற்சாலை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் துறைக்கான அமைச்சர் ஆவார்.[1] இவர் சிவசேனா கட்சியை சேர்ந்தவர். 1951, சூன் 2ல் மும்பையில் பிறந்தார். வயது 62. மும்பை மாநகராட்சியின் கவுன்சிலராக அரசியல் வாழ்க்கையைத் துவக்கினார். பின் மாநகராட்சியின் நிலைக்குழுத் தலைவராக பணியாற்றினார். மக்களவைத் தேர்தலில் ஆறு முறை வெற்றி பெற்றுள்ளார். மகாராஷ்டிரா சட்டசபையில் சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசில் பல துறைகளில் அமைச்சர் பொறுப்பும் வகித்துள்ளார். சிவ சேனா கட்சியின் மூத்தத் தலைவராக கருதப்படுகிறார். 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மகாராஷ்டிராவில் உள்ள ராய்காட் தொகுதியில் போட்டியிட்டு, தேசியவாத காங்கிரசு கட்சியை சேர்ந்த சுனில் தத்தாத்ரேயாவை 2,110 ஓட்டு வித்தியாசத்தில் வென்றார்.[2] இவர் 1951-ஆம் ஆண்டின் ஜூன் இரண்டாம் நாளில் பிறந்தார். இவர் மும்பையில் பிறந்தார்.
இவர் கீழ்க்காணும் பதவிகளில் இருந்துள்ளார்.[2]