ஆனந்த்சங்கர் துருவ் | |
---|---|
![]() ஆனந்த்சங்கர் துருவ் | |
பிறப்பு | அகமதாபாத், குஜராத், இந்தியா | 25 பெப்ரவரி 1869
இறப்பு | 7 ஏப்ரல் 1942 | (அகவை 73)
தொழில் | எழுத்தாளர் |
மொழி | குஜராத்தி |
தேசியம் | இந்தியன் |
ஆனந்த்சங்கர் துருவ் (ஆங்கிலம்: Anandshankar Bapubhai Dhruv, 1869 - 1942) இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பிறந்தவர். இவர் கல்வியாளராகவும், எழுத்தாளராகவும், பத்திரிகையாசிரியராகவும் அறியப்பட்டார். இவர் முமுக்ஷு, "ஹிந்தஹித்சிந்தக் எனும் பெயர்களில் எழுதிவந்தார்.[1][2]
இவர் அகமதாபாத்தில் 1869 பிப்ரவரி மாதம் 25 ஆம் நாள் பிறந்தார். இவரது தந்தை கத்தியவார் பகுதியின் அலுவலர் ஆவார். ஓய்விற்குப் பின்னர் பரோடா மாகாணத்தில் பணிபுரிந்தவர். இவர் இளம் வயதில் ஆங்கிலவழிக் கல்வியும் சமஸ்கிருதமும் கற்றார். குஜராத் கல்லூரியில் சமஸ்கிருத ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகப் பணியாற்றினார். குஜராத் பல்கலைக்கழகம் உருவாக முயன்றவர்களுள் இவரும் ஒருவர்.