ஆனந்த்ஜி கல்யாண்ஜி அறக்கட்டளை(Anandji Kalyanji Trust ) என்பது மிகப் பெரிய மற்றும் பழமையான சமண அறக்கட்டளை ஆகும். இது லே சமணர்களால் நிர்வகிக்கப்படுகிறது. [1]அகமதாபாத்தில் தலைமையகத்தைக் கொண்ட இது 1200க்கும் மேற்பட்ட சமணக் கோவில்களை நிர்வகிக்கிறது. [2][3] இந்த அறக்கட்டளை சுவேதாம்பர சமண தீர்த்தங்கள் தொடர்பான புத்தகங்களையும் வெளியிடுகிறது. அசல் தொண்டு அறக்கட்டளை கி.பி 1630-40 தசாப்தங்களில் நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இது 1720 தசாப்தத்திலிருந்து ஆனந்த்ஜி கல்யாண்ஜி அறக்கட்டளை என்ற பெயரில் இயங்கி வருகிறது. [4] மேலும்,கிடைக்கக்கூடிய ஆவணங்கள் அறக்கட்டளையின் வரலாற்றை 1777 (கி.பி 1720) க்கு எடுத்துச் செல்கின்றன.
சத்ருஞ்செய பாலிதானா கோயில்களை நிர்வகிக்க ஆரம்பத்தில் நிறுவப்பட்ட இந்த அறக்கடளை இப்போது பல சமண தீர்த்தங்களையும், சுவேதாம்பர மரபுக்கு சொந்தமான கோயில்களையும் நிர்வகிக்கிறது. இது சாந்திதாசு சவேரியால் நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது, அதன் தலைமை தலைமுறைகளாக ஒரே குடும்பத்தில் உள்ளது. அவர்கள் அகமதாபாத்தின் நகர்-சேத்தர்களாக இருந்தனர். [5] பதினொன்றாம் தலைமுறை உறுப்பினராக இருந்த தொழிலதிபரும் கல்வியாளருமான கஸ்தூரிபாய் லால்பாய், 50 ஆண்டுகளாக அறக்கட்டளைக்குத் தலைமை தாங்கினார். அதனைத் தொடர்ந்து சிரேனிக் கஸ்தூர்பாய் லால்பாய் 30 ஆண்டுகளாக தலைவராக இருநதார். [6] தர்போது சாம்வேக் லல்பாய் இப்போது அறக்கட்டளைக்கு தலைமை தாங்குகிறார்.
ரிகாப்தியோ ( திகம்பரங்கள் மற்றும் இந்துக்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது)
சிகார்ஜி சமணக் கோயில்கள் (திகம்பரர்களுடன் சர்ச்சையின் கீழ் பகிர்ந்து கொள்ளப்பட்டது, திகாம்பர்களின் நிர்வாக அதிகாரத்தை சுவேதாம்பர்கள் அங்கீகரிக்கவில்லை)
தரங்கா சமணர் கோயில் (திகம்பரர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட மலை, அஜித்நாத் கோயில் சுவேதாம்பர்களின் வசம் உள்ளது. 1963 இல் புதுப்பிக்கப்பட்டது.
வாமாஜ்
தில்வாரா கோயில்
பல்வேறு சமண கோவில்களின் பழுதுபார்க்கும் பணிகளுக்காக இந்த அறக்கட்டளை ஒவ்வொரு ஆண்டும் ரூ. 150 மில்லியனுக்கும் அதிகமாக செலவிடுகிறது. அறக்கட்டளை உறுப்பினர்கள் வருடத்திற்கு இரண்டு முறை சந்திக்கிறார்கள். [5]