ஆனர்த்த நாடு


ஆனர்த்த நாடு (Anarta) பண்டைய இந்தியாவின் இதிகாச, புராண காலத்திய நாடுகளில் ஒன்றாகும். மகாபாரத காவியத்திலும், பாகவத புராணத்திலும், தற்கால குசராத்து மாநிலத்தின் சௌராஷ்டிரப் பகுதியில் இருந்த ஆனர்த்த நாட்டைக் குறித்த குறிப்புகள் உள்ளது. இதன் தலைநகரம் தற்கால வாட்நகர் ஆகும்.

மகத நாட்டு மன்னன் ஜராசந்தன் மற்றும் மதுராவின் கம்சனின் தொடர் அச்சுறுத்தல்கள் காரணமாக, யாதவர்கள், மதுராவிலிருந்து வெளியேறி, இச்சௌராட்டிரப் பகுதியில் குடியேறினர். பின்னர் கிருஷ்ணரின் முயற்சியால் துவாரகை நகரை புதிதாக நிறுவி யாதவர்கள் சௌராட்டிர தீபகற்பத்தை ஆட்சி செய்தனர்.

புகழ் பெற்ற ஆனர்த்த நாட்டவர்கள்

[தொகு]
  1. கிருஷ்ணர்
  2. பலராமன்
  3. சாத்தியகி
  4. கிருதவர்மன்
  5. உத்தவர்
  6. அக்ரூரர்
  7. சாம்பன்

மத்திய மேற்கு இந்தியாவின் யாதவ நாடுகள்

[தொகு]
  1. சேதி நாடு (ஜான்சி மாவட்டம், உத்தரப் பிரதேசம்)
  2. சூரசேன நாடு அல்லது விரஜ நாடு (மதுரா, உத்தரப் பிரதேசம்
  3. தசார்ன நாடு (சேதி நாட்டின் தெற்கில்)
  4. கரூசக நாடு ( தசார்ன நாட்டின் கிழக்கில்)
  5. குந்தி நாடு (அவந்தி நாட்டின் வடக்கில்)
  6. அவந்தி நாடு, மத்தியப் பிரதேசம்
  7. கூர்ஜர நாடு (இராஜஸ்தான் மாநிலத்தின் தெற்கில்)
  8. ஹேஹேய நாடு, மத்தியப் பிரதேசம்.
  9. சௌராட்டிர நாடு, தெற்கு குஜராத்
  10. துவாரகை நாடு (குஜராத்)
  11. விதர்ப்ப நாடு (வடகிழக்கு மகாராட்டிரம்)

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]