ஆனைமலை புள்ளி தவளை | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | உபெரோடான்
|
இனம்: | உ. ஆனமலையன்சிசு
|
இருசொற் பெயரீடு | |
உபெரோடான் ஆனமலையன்சிசு (ராவ், 1937) | |
வேறு பெயர்கள் [2] | |
|
ஆனைமலை புள்ளி தவளை (Anamalai dot frog) என்பது (உபெரோடான் ஆனமலையன்சிசு), ஆனமலை ராமனெல்லா அல்லது சிவப்பு-பழுப்பு மைக்ரோகைலிட் தவளை என்றும் அழைக்கப்படுவது தென்னிந்தியாவில் காணப்படும் குறுகிய-வாய் தவளை சிற்றினமாகும். இது மேற்குத் தொடர்ச்சி மலையில் தென்பகுதியில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலையின் அடிவாரத்தில் இத்தவளைக் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சிற்றினத்தின் முழுமையான வடிவம் காணப்படவில்லை. மேலும் 2010ஆம் ஆண்டில் பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயத்தில் மீண்டும் கண்டுபிடிக்கப்படும் வரை இச்சிற்றினத்தின் நிலை நிச்சயமற்றதாக இருந்தது. ஆனைமலை புள்ளி தவளை குறித்த தகவல், 1937ஆம் ஆண்டில் சி. ஆர். நாராயண் ராவால் ஒரு முறை மட்டுமே பதிவுச் செய்யப்பட்டது.
இந்தச் சிற்றினம் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்திற்குள் வெவ்வேறு வாழ்விடங்களில் காணப்படுகின்றது. இந்தத் தவளை இரண்டு மஞ்சள் கோடுகள் மற்றும் சிதறிய மஞ்சள் புள்ளிகளுடன் அடர் பழுப்பு நிறத் தோள்பட்டை வரை காணப்படுகிறது. உடலின் அடிப்பகுதி பழுப்பு நிறத்தில் சிதறிய வெள்ளை புள்ளிகளுடன் காணப்படும். இது 'ஆனைமலை புள்ளித் தவளை' என்ற பொதுவான பெயரைக் கொடுக்கிறது. இந்தத் தவளை பருவமழைக் காலத்தில் சத்தமாகக் குரல் எழுப்பும். இது ஆண்டு முழுவதும் காடுகளின் தரையில் அல்லது மரப் பொந்து, கற்கள் மற்றும் மரக்கட்டைகளின் கீழ் மறைந்து காணப்படும்.[3]