ஆனையம்பட்டி எஸ் கணேசன் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜலதரங்க இசைக் கலைஞர் ஆவார். இவர் கருநாடக இசைப் பாடகராகவும், வயலின் இசைக் கலைஞராகவும் செயல்படுகிறார்.
தென்னிந்தியா முழுவதும் ஜலதரங்க இசை நிகழ்ச்சிகளை இவர் நிகழ்த்தியுள்ளார். 2005-2006 சென்னை இசை விழாவில் இவர் ஒருவரே ஜலதரங்க இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். இவர் தமது கருவியாகப் பயன்படுத்தும் சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 19 போர்சிலியன் கிண்ணங்கள், 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்தவையாகும்.[1]