ஆபோகி

ஆபோகி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 22வது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தின் 4 வது மேளமாகிய கரகரப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும்.[1][2][3]

இலக்கணம்

[தொகு]
ஆபோகி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி2212 ஸ்
அவரோகணம்: ஸ் த212 ரி2
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1) , சதுஸ்ருதி தைவதம் (த2), ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • ப, நி என்னும் ஸ்வரங்கள் வர்ஜம் ஆதலால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும்.
  • இது ஒரு ஔடவ இராகம். இது ஒரு உபாங்க இராகம்.

அம்சங்கள்

[தொகு]
  • இது ஒரு சர்வ ஸ்வர கமக வரிக ரத்தி இராகம் ஆகும்.
  • இது திரிஸ்தாயி இராகம் ஆகும். மேலும் எப்போதும் பாடக் கூடியது.
  • நீண்ட ஆலாபனைக்கு இடம் கொடுக்காத இராகம்.
  • கச்சேரியின் ஆரம்பத்தில் பாடுவதற்குரிய இராகம். தியாகராஜ சுவாமிகளால் பிரசித்திக்கு வந்த இராகங்களில் இதுவும் ஒன்று.
  • மூர்ச்சனாகர ஜன்ய இராகம். இதன் மத்திம மூர்ச்சனையே வலஜி இராகம் ஆகும்.
  • கருணைச் சுவை கொண்ட இராகம்.

உருப்படிகள்

[தொகு]
வகை உருப்படி தாளம் இயற்றியவர்
வர்ணம் எவரி போதன ஆதி பட்டணம் சுப்பிரமணிய அய்யர்
கீர்த்தனை சபாபதிக்கு வேரு தெய்வம் ரூபகம் கோபாலகிருஷ்ண பாரதியார்
கிருதி சேவிக்க வேண்டுமையா ஆதி முத்துத் தாண்டவர்
கிருதி நன்னு போரவநீ ஆதி தியாகராஜர்
கிருதி மனஸூநில்பசத்தி ஆதி தியாகராஜர்

ஆபோகி இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள்

[தொகு]
  1. " இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே... " - வைதேகி காத்திருந்தாள்
  2. " கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்... " - சந்திரமுகி

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Chaudhuri, A. (2021). Finding the Raga: An Improvisation on Indian Music. Faber & Faber. p. 52. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-571-37076-4. பார்க்கப்பட்ட நாள் 26 May 2021.
  2. Ragas in Carnatic music by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications
  3. Raganidhi by P. Subba Rao, Pub. 1964, The Music Academy of Madras

வெளி இணைப்புகள்

[தொகு]