ஆப்கானித்தான் இடைக்கால அரசு (2021)

15 ஆகஸ்டு 2021 அன்று ஆப்கானித்தானை கைப்பற்றிய தாலிபான்களின் ஆப்கானித்தான் இசுலாமிய அமீரகத்தின் இடைக்கால அரசின் பிரதம அமைச்சராக 7 செப்டம்பர் 2021 அன்று முகமது அசன் அகுந்து மற்றும் துணைப் பிரதமர்களாக அப்துல் கனி பராதர் மற்றும் மௌலவி ஹனாபி தேர்வு செய்யப்பட்டதாகவும், மேலும் அமைச்சரவையில் 19 கேபினெட் [தெளிவுபடுத்துக]அமைச்சர்களும், 11 துணை அமைச்சர்களும், இயக்குநர்களும் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தாலிபான்களின் செய்தித் தொடர்பாளர் சஃபியுல்லா முஜாகிதின் அறிவித்துள்ளார்.[1][2][3][4] ஆ தாலிபான்களின் அரசியல் செயலகம் தற்காலிகமாக கத்தார் நாட்டின் தோகா நகரத்தில் செயல்படும்.

முல்லா ஓமர் தலைமையில் 1996 - 2001 ஆண்டுகளில் நடைபெற்ற தாலிபான்களின் முதல் அரசுக்குப் பின், 20 ஆண்டுகளுக்குப் பின்னர் இத் தாலிபான்களால் மீண்டும் தற்போது நிறுவப்படும் இரண்டாவது அரசாகும்.

இடைக்கால அமைச்சரவைக் குழு உறுப்பினர்கள்

[தொகு]

காபினேட் அமைச்சர்கள்

[தொகு]
  1. உள்துறை: அக்கானித் தலைவர் சிராஜிதியுன் ஹக்கானி
  2. பாதுகாப்புத்துறை: முகமது உமரின் மகன் முகமது யாகூப்
  3. வெளியுறவுத்துறை:அமீர் கான் முட்டாக்கி
  4. நிதித்துறை: முல்லா ஹிதாயத் பத்ரி
  5. நீதித்துறை: அப்துல் ஹக்கீம் இஷாக்ஸி
  6. தகவல் துறை: கைருல்லா சயீத் வாலி கெய்ர்க்வா
  7. கல்வித் துறை: மௌலவி நூருல்லா முனீர்
  8. தகவல் மற்றும் பண்பாட்டுத் துறை: முல்லா கைருல்லா கைர்காக்
  9. பொருளாதாரத்துறை: குவாரி தீன் ஹனீப்
  10. ஹஜ் துறை: மௌலவி நூர் முகமது சாகிப்
  11. எல்லை மற்றும் பழங்குடி மக்கள் விவகாரம்: முல்லா நூருல் நூரி
  12. கிராமப்புற மறுகட்டமைப்பு & மேம்பாடு: முல்லா முகமது யுனூஸ் அகுந்த்சாதா
  13. பொதுப்பணித் துறை:முல்லா அப்துல் மனான் ஓமரி
  14. கனிம வளம் & பெட்ரோலியம்: முல்லா முகமது ஈசாஅ அகுந்த்
  15. நீர் & எரிசக்தி: முல்லா அப்துல் லத்தீப் மன்சூர்
  16. விமானப் போக்குவரத்து & சாலைப் போக்குவரத்து:முல்லா ஹமிதுல்லா அகுந்த்சாதா
  17. உயர் கல்வித்துறை: அப்துல் பாகி ஹக்கானி
  18. தொலைத்தொடர்பு; நஜிபுல்லா ஹக்கானி
  19. அகதிகள் மறுவாழ்வு: கலீலுர் ரக்மான் ஹக்கானி

துணை அமைச்சர்களும், இயக்குநர்களும்

[தொகு]
  1. உளவுத் துறை இயக்குநர்: அப்துல் ஹக் வாசிக்
  2. மத்திய வங்கியின் இயக்குநர்: ஹாஜி முகமது இதிரீஸ்
  3. அதிபர் அலுவலக தலைமை நிர்வாகி: அகமத் ஜான் அகமதி
  4. துணைப் பாதுகாப்புத் துறை அமைச்சர்: முல்லா முகமது பாசில்
  5. இராணுவத் தலைவர்: குவாரி பசியுத்தீன்
  6. துணை வெளியுறவுத் துறை அமைச்சர்: செர் முகம்மது அப்பாஸ் ஸ்தானிக்சாய்
  7. துணை உள்துறை அமைச்சர்: மௌலவி நூர் ஜலால்
  8. துணைத் தகவல் & பண்பாட்டு அமைச்சர்: சபியுல்லா முஜாகித்
  9. முதல் துணை உளவுத்துறை அமைச்சர்: முல்லா தஜ்மீர் ஜாவேத்
  10. உளவுத் துறை நிர்வாகத் துணை அமைச்சர்: முல்லா ரகமத்துல்லா நஜீப்
  11. போதைப் பொருள் தடுப்பு உள்துறை அமைச்சர்: முல்லா அப்துல்லா அகுந்த்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Taliban Announces Head of State, Acting Ministers
  2. Hardliners get key posts in new Taliban government
  3. "Profile: Mohammad Hasan Akhund, the head of Taliban government". Al Jazeera. 7 September 2021. https://www.aljazeera.com/news/2021/9/7/profile-mohammad-hassan-akhund-the-head-of-taliban-government. 
  4. Taliban announce new government for Afghanistan