ஆப்பிரிக்க விலங்கியல் African Zoology | |
---|---|
AfricanZoologycover.jpg | |
முன்பிருந்த பெயர்(கள்) | விலங்கியல் ஆப்பிரிக்கானா, தென்னாப்பிரிக்க விலங்கியல் ஆய்விதழ் |
சுருக்கமான பெயர்(கள்) | Afr. Zool. |
துறை | விலங்கியல் |
மொழி | ஆங்கிலம் |
பொறுப்பாசிரியர்: | டி வாசுலர் & சி பேக்கர் |
வெளியீட்டு விவரங்கள் | |
பதிப்பகம் | தென் ஆப்பிரிக்கா விலங்கியல் சங்கம் (தென் ஆப்பிரிக்கா) |
வரலாறு | 1965–முதல் |
வெளியீட்டு இடைவெளி: | காலாண்டு இதழ் (இணையம்); அரையாண்டு (அச்சில்) |
தாக்க காரணி | 0.86 (2019) |
குறியிடல் | |
ISSN | 1562-7020 |
LCCN | 00227123 |
OCLC | 44395820 |
இணைப்புகள் | |
ஆப்பிரிக்க விலங்கியல் (African Zoology) என்பது ஆப்பிரிக்காவிற்கும் அதன் சுற்றியுள்ள பெருங்கடல்கள், கடல்கள் மற்றும் தீவுகளுக்கும் தொடர்புடைய விலங்கியலின் அனைத்து பண்புகளையும் உள்ளடக்கிய ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடும் சகமதிப்பாய்வு செய்யப்பட்ட அறிவியல் இதழாகும். இந்த ஆய்விதழ் தென்னாப்பிரிக்காவின் விலங்கியல் சங்கத்தால் வெளியிடப்படுகிறது. இதில் மதிப்பாய்வு, முழு நீள ஆய்வுக்கட்டுரைகள், குறுகிய தகவல்தொடர்புகள் மற்றும் புத்தக மதிப்புரைகளையும் வெளியிடுகிறது.
இந்த பத்திரிகை 1965ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவின் விலங்கியல் சங்கத்தால் விலங்கியல் ஆப்பிரிக்கானா என நிறுவப்பட்டது. இது தென்னாப்பிரிக்க விலங்கியல் ஆய்விதழ் என மறுபெயரிடப்பட்டது. 1979ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்க வெளியீட்டு பணியகம் அதன் வெளியீட்டாளராக ஆனது. 2000ஆம் ஆண்டில், இந்த ஆய்விதழ் தென்னாப்பிரிக்க விலங்கியல் சங்கத்தால் தற்போதைய பெயரில் வெளியிடப்பட்டது. தற்பொழுது இந்த ஆய்விதழை டெய்லர் & பிரான்சிசு நிறுவனம் வெளியிடுகிறது. ஆண்டுக்கு 4 இதழ்கள் வெளியாகிறது.
ஆப்பிரிக்க விலங்கியல் ஆய்விதழில் வெளியிடப்படும் ஆய்வுக்கட்டுரைகளின் ஆய்வுச் சுருக்கங்கள் உயிரியல் சுருக்கங்கள், வேதியியல் சுருக்கங்கள், உயிரியலில் தற்போதைய முன்னேற்றங்கள், ஜியோஆப்ஸ்ட்ராக்ட்ஸ், அறிவியல் மேற்கோள் அட்டவணை மற்றும் விலங்கியல் பதிவுகள் ஆகிய மேற்கோள் தரவைப்பகங்களில் அட்டவணைப்படுத்தப்படுகிறது. பத்திரிக்கை மேற்கோள் அறிக்கையின்படி, 2019-ல் ஆப்பிரிக்க விலங்கியலின் தாக்கக் காரணி 0.86 ஆகும்.[1]