ஆமை வகைப்பாட்டியல் பணிக்குழு (Turtle Taxonomy Working Group) என்பது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் ஆமை மற்றும் நன்னீர் ஆமை நிபுணர் குழுவின் முறைசாரா பணிக்குழு ஆகும்.[1] இது பல முன்னணி ஆமை வகைப்பாட்டியல் வல்லுநர்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது. பல ஆண்டுகளாகத் தனிப்பட்ட பங்கேற்பாளர்களால் மாறுபட்ட பங்கேற்புடன் செயல்பட்டு வருகின்றது.
ஆமை வகைப்பாட்டியல் பணிக்குழு 2007ஆம் ஆண்டு முதல் வாழுகின்ற மற்றும் சமீபத்தில் அழிந்துபோன ஆமைகளின் வருடாந்திர சரிபார்ப்புப் பட்டியலைத் தயாரித்துவருகிறது. ஆமை வகைப்பாட்டியல் தொடர்பாக முன்மொழியப்பட்ட மாற்றங்களை ஆலோசிக்கிறது. மேலும் சரிபார்ப்புப் பட்டியலில் தொடர்ச்சியான முன்மொழியப்பட்ட மாற்றங்களை ஏற்றுக்கொள்வது, நிராகரிப்பது அல்லது இடைநிறுத்துவது பற்றி தன் பரிசீலனையை விவரிக்கிறது. சரிபார்ப்புப் பட்டியலின் சமீபத்திய பதிப்புகள், ஆமை உயிரினக்குழுக்களின் அனைத்து அசல் விளக்கங்களுக்கும் முழு முதன்மையான ஒத்த சொற்கள் மற்றும் மேற்கோள்கள் மற்றும் பொருந்தக்கூடிய ஒவ்வொரு இனத்தின் சி.ஐ.டி.யி.எசு. மற்றும் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் காப்பு நிலைகளையும் உள்ளடக்கியுள்ளது.[2][3]