ஆமையும் பறவைகளும் (The Tortoise and the Birds) என்பது நாட்டுப்புற மூலத்தைக் கொண்டிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் கொண்ட ஒரு புனை கதையாகும். இதன் ஆரம்ப வடிவங்கள் இந்தியா மற்றும் கிரீஸ் இரண்டிலும் காணப்படுகின்றன. இக்கதையின் ஆப்பிரிக்க வகைகளும் உள்ளன. இவற்றிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய தார்மீக படிப்பினைகள் அவை சொல்லப்படும் சூழலைப் பொறுத்து மாறுபடுகின்றன.
புத்த மத ஜாதகக் கதைகளில் எப்போதும் ஏதாவது பேசிக் கொண்டே இருக்கும் ஒரு ஆமை பற்றிய கதை ஒன்று காணப்படுகிறது.[1] இந்த வடிவத்தில், அதிகமாகப் பேசிக்கொண்டிருக்கும் மன்னனோடு இந்தக் கதை தொடர்புடையதாக உள்ளது. அந்த அரசனின் அரசவை முற்றத்தில் வானத்திலிருந்து விழுந்து இரண்டாகப் பிரிந்த ஒரு ஆமையைக் காண்கிறார். அந்த ஆமை அதிகமாகப் பேசியதன் விளைவாக இது நிகழ்ந்தது என்று அவரது அமைச்சர் விளக்குகிறார். ஆமை ஒன்று இரண்டு வாத்துக்களுடன் நட்பு கொண்டது. அந்தப் பறவைகள் ஆமையை இமயமலையில் உள்ள தங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்வதாக உறுதியளித்தன. இரண்டு பறவைகளும் ஒரு குச்சியினைப் பிடித்துக் கொள்ள வேண்டுமெனவும், ஆமையானது அந்தக் குச்சியின் மையப்பகுதியில் தனது வாயினால் கவ்விக்கொள்வதெனவும் பேசி முடிக்கப்பட்டது. ஆனால், ஆமையானது பேசாமல் கவனமாக இருக்க வேண்டும். பயணத்தின் போது கீழே உள்ள குழந்தைகள் அதை கேலி செய்தனர். ஆமையால் குழந்தைகளின் கேலியை பொறுத்துக் கொள்ள இயலாமல் பதிலளித்தபோது அது அதன் அழிவுக்கு வழி வகுத்தது. புத்த ஜாதக கதைகள் சிற்பக்கலைக்கு மிகவும் பிடித்த விஷயமாக இருந்தன. இந்த கதை இந்தியாவிலும் ஜாவாவிலும் உள்ள பல்வேறு மத கட்டுமானங்கள் பலவற்றில் புடைப்புச் சிற்பமாக காணப்படுகிறது. பெரும்பாலும் சுருக்கமான விவரிப்பாக சித்தரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு சிற்பமும் ஆமையைச் சுமந்து செல்லும் பறவைகள், அதன் வீழ்ச்சி மற்றும் பூமியை அடையும் விதம் ஆகியவற்றை உள்ளடக்கி படிப்படியாக கதையை விவரிக்ககும் விதமாக உள்ளன.[2] உதாரணமாக, ஜாவாவில் உள்ள 9 ஆம் நூற்றாண்டின் மெண்டுட் கோவிலில், பறவைகள் மற்றும் ஆமை மேல் வலதுபுறத்தில் தோன்றும், அதே நேரத்தில் தரையில் வேட்டையாடுபவர்கள் வில்லுடன் குறி வைக்கிறார்கள். உடனடியாக கீழே, அதே மூவரும் விழுந்த உடலை உணவுக்காக தயார் செய்கிறார்கள். இந்த விதமாக சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன[3]
மெண்டுட் உதாரணத்தைப் போலவே, கதையின் பிற வடிவங்களும் புத்த மத இலக்கியங்களில் பல சூழல்களில் சித்தரிக்கப்பட்டுள்ளன. பஞ்சதந்திரக் கதையில் இந்திய இலக்கிய மாறுபாட்டில், ஆமையும் அவரது நண்பர்களான பறவைகளும் வறண்டு போகும் ஒரு ஏரியில் வாழ்கின்றனர். தங்கள் நண்பரின் எதிர்கால துன்பத்தை உணர்ந்து, வாத்துகள் அந்த ஆமையை ஏற்கனவே விவரித்த விதத்தில் பறக்க பரிந்துரைக்கின்றன. அவர்கள் கடந்து செல்லும் நகரத்தில் உள்ள மக்களின் கருத்துகளைக் கேட்டதும், ஆமை அவர்களுக்கு அவரவர் வேலையைப் பாருங்கள் என்று சொல்ல முனைகிறது. அதன் விளைவாக, ஆமையானது கீழே வீழ்ந்த பிறகு வெட்டப்பட்டு சாப்பிடப் படுகிறது.[4] இந்த கதை இறுதியில், சேர்க்கப்பட்டு பாரசீக, சிரியாக், அரபு, கிரேக்கம், எபிரேய மற்றும் லத்தீன் மொழிகளில் மொழிபெயர்ப்புகள் வழியாக மேற்கு நோக்கி பயணித்தது. இவற்றில் கடைசியாக இடைக்காலத்தின் முடிவில் மற்ற ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்படத் தொடங்கியது. மீனவர் ஒருவரின் வருகையால் பாதுகாப்பு கருதி இந்த இடம்பெயர்வானது திட்டமிடப்படுகின்றது. பயணத்தின் இடையில் தரையில் நிற்கும் இடையர்கள், பறவைகள் சுமந்து செல்லும் ஆமையானது கீழே இருந்தால் நல்ல உணவாகும் என்று பேசிக்கொள்கின்றனர். இந்தப் பேச்சு ஆமையின் காதில் விழ ஆமை சினங்கொண்டு அவர்களுக்கு பதிலளிக்க எத்தனிக்கிறது. அதன் காரணமாக ஆமையானது கீழே விழ நேரிடுகிறது.[5]
பஞ்சதத்திர புனைகதைகளின் இத்தாலிய வடிவத்தின் ஆரம்பத்தில் தாமஸ் நோர்த் என்வரால் தி மாரல் ஆஃப் டோனி (1570) என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.[6] ஆமை மற்றும் பறவைகளின் கதை 'ஒரு மனிதனுக்கு தன்னை விட பெரிய எதிரி இல்லை' என்ற உணர்வை விளக்கும் விதமாகத் தோன்றுகிறது.