ஆயர் கூனிங் செலாத்தான் | |
---|---|
Air Kuning Selatan | |
நெகிரி செம்பிலான் | |
மலேசியாவில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 2°29′44″N 102°28′33″E / 2.49556°N 102.47583°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | தம்பின் |
ஆயர் கூனிங் செலாத்தான் (ஆங்கிலம்: Air Kuning Selatan; மலாய் மொழி: Air Kuning Selatan) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின், தம்பின் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம்; ஒரு முக்கிம். இந்த நகரம் கெமிஞ்சே மற்றும் கிம்மாஸ் நகரங்களுக்கு இடையே அமைந்துள்ளது.
ஆயர் கூனிங் செலாத்தான் நகரம், சிரம்பான் தலைநகரில் இருந்து 75 கி.மீ.; கோலாலம்பூர் மாநகரில் இருந்து தெற்கே 135 கி.மீ.; மலாக்கா நகரில் இருந்து 57 கி.மீ.; ஜொகூர் பாரு நகரில் இருந்து 220 கி.மீ. தொலைவில் உள்ளது.
மலாக்கா மாநிலத்தின் பத்தாங் மலாக்கா நகரம் இந்த நகரத்திற்கு மிக அருகாமையில் உள்ளது.
ஆயர் கூனிங் செலாத்தான் வட்டாரத்தில் முன்பு நிறைய ரப்பர் தோட்டங்கள் இருந்தன. நூற்றுக் கணக்கான தமிழர்கள் அந்தத் தோட்டங்களில் பணி புரிந்தார்கள். நில மேம்பாட்டுத் திட்டங்கள்; நகர விரிவாக்கங்கள் போன்றவற்றால் அந்தத் தோட்டங்கள் அழிக்கப்பட்டு விட்டன.
தற்சமயம் ஐந்து தோட்டங்கள் மட்டுமே உள்ளன. அவற்றில் இரண்டு தோட்டங்களில் மட்டுமே தமிழ்ப்பள்ளிகள் உள்ளன.
ஆயர் கூனிங் செலாத்தான் வட்டாரத்தில் இரு தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 46 மாணவர்கள் பயில்கிறார்கள். 19 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.[1][2]
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|
NBD4072 | ஆயர் கூனிங் செலாத்தான் | SJK(T) Air Kuning Selatan[3] | ஆயர் கூனிங் செலாத்தான் தமிழ்ப்பள்ளி | கெமிஞ்சே | 31 | 11 |
NBD5033 | புக்கிட் கிளேடேக் தோட்டம் | SJK(T) Ladang Bukit Kledek[4] | புக்கிட் கிளேடேக் தோட்டத் தமிழ்ப்பள்ளி | கெமிஞ்சே | 15 | 8 |