ஆய்க்குடி

ஆய்க்குடி
முதல் நிலை பேரூராட்சி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தென்காசி, கடையநல்லூர் வட்டம்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்15,172
அலுவல் மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)
அஞ்சல் குறியீட்டு எண்
627852
வாகனப் பதிவுTN76

ஆய்க்குடி (ஒலிப்பு) (Ayakudi) என்பது இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தில், தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட முதல் நிலை பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

[தொகு]

பொதிகை மலையடிவாரத்தில், தென்காசி - சுரண்டை செல்லும் பாதையில் அமைந்த ஆய்க்குடி ஊரைச் சுற்றி தென்னந்தோப்புகளும், வெற்றிலை கொடிக்கால்களும் நிறைந்து காணப்படுகிறது. இங்கு புகழ்பெற்ற கம்பிளி மகாலிங்கம் கோவில் மற்றும் பாலசுப்பிரமணியம் சுவாமி கோவில்கள் உள்ளன. கம்பிளி மகாலிங்கம் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அருகமைந்த தொடருந்து நிலையம், தென்காசி ஆகும்.

அருகமைந்த ஊர்கள்

[தொகு]

திருநெல்வேலியிருந்து 60 கிமீ தொலைவில் அமைந்த ஆய்க்குடிக்கு வடக்கில் அனுமான் ஆறும் கிளாங்காடு, கிழக்கில் சுரண்டையும், தெற்கில் தென்காசியும், மேற்கில் செங்கோட்டையும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

[தொகு]

8.5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 64 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கடையநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

மக்கள் தொகை

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஆய்க்குடி பேரூராட்சி 4,088 வீடுகளும், 15,129 மக்கள்தொகையும் கொண்டது.[2]

வரலாறு

[தொகு]

பொதியமலைச் சாரலில் உள்ள ஆய்க்குடியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த இவரை வேள் ஆய் என்றும் ஆய் ஆண்டிரன் என்றும் குறிப்பிடுவர். இவர் பெயரை ஆய்க்குடி என அழைக்கப்பட்டது. பிற்காலச் சோழர்களின் படையெடுப்பினால், இந்தியாவில் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தையும், கேரள மாநிலத்தின் கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களையும் உள்ளடக்கியிருந்தது. ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஆய்க்குடி கேரளா ஒரு பகுதியாக உள்ளது மற்றும் இன்று வரைக்கும் ஆய்க்குடி பாலசுப்பிரமணியம் கோவில் கன்னியாகுமரி மாவட்டம் இந்து சமய அறநிலையத்துறை உள்ளது.

குறிப்பு: புறநானூறு 132 ,134

கடையேழு வள்ளல்களில் ஒருவரான ஆய் ஆண்டிரன் ஆய்க்குடியில் வாழ்ந்த, ஆண்ட குறுநில மன்னன் ஆய் ஆண்டிரன் ஆண்ட பகுதி என்பதால் ஆய்க்குடி எனும் பெயர் அமைந்ததாக இலக்கியங்களால் அறிகிறோம். சங்க இலக்கியங்கள் நற்றிணை (167) குறுத்தொகை (84) அக நானூறு (69,152,198) புறநானூறு (127,136,240-41) ஆகிய நூல்களில் ஆய் ஆண்டிரன், ஆய்க்குடி என்னும் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

நாகம் நல்கி மகாலிங்க, ஆலமர் செல்வதற்கு கொடுத்தவன் ஆய் என்று சிறு பாணாற்றுப் படை (96-99) கூறுகின்றது. இவை அனைத்தும் ஆய்க்குடி என்று பெயர் வந்ததற்கும் ஒரு சாட்சி சான்றாக திகழ்கின்றது என்பது உண்மை.

ஆய்க்குடியும் புறநானூறும்

[தொகு]

புறநானூறு 132, 144 போன்ற பகுதிகளில் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்னும் புலவர் வேள் ஆய் அண்டிரன் மீது பாடிய பாடலில்

நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி குவளைப் பைஞ்சுனை பருகி அயல தகரத் தண்ணிழல் பிணையொடு வதியும் வடதிசை யதுவே வான் தோய் இமயம் தென் திசை ஆஅய்குடி இன்றாயின் பிறழ்வது மன்னோ இம் மலர்தலை உலகம்”.

  1. விளக்கம்:

இந்த உலகம் நிலையாக நிற்க வட திசையில் உள்ள இமயமும், தென் திசையில் உள்ள பொதியமும் (ஆய்க்குடி)தான் காரணம். வட திசை இமய மலையில் கவரி மான்கள் நரந்தைப் புல்லையும் நறுமணம் உடைய மற்ற புல்லையும் மேய்ந்து விட்டு பெண் மான்களுடன் தகர மர நிழலில் தூங்கும்.

முன்னொரு காலத்தில் ஆய்க்குடியில் இயற்கை வளம், நாகரிகம், பண்பாடு மற்றும் ஆன்மீக போன்றவை இமயமலைக்கு இணையாக உள்ளது என்பதை புறநானூறு நூல்கள் விளக்குகிறது.[சான்று தேவை]

கோவில்கள்

[தொகு]
  1. ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
  2. ஆய்க்குடி உலகம்மன் கோயில்
  3. ஆய்க்குடி, உச்சி பிள்ளையார் கோவில் மற்றும் கம்பிளி மகாலிங்கம் கோவில்
  4. ஆய்க்குடி,ஏகாம்பரேஸ்வரர் சமேத காமாட்சி அம்மன் கோவில்
  5. ஆய்க்குடி,வடக்குத்தி அம்மன் கோவில்
  6. ஆய்க்குடி,நவநீதகிருஷ்ணன் கோவில்
  7. ஆய்க்குடி,லெட்சுமி நாராயண பெருமாள் கோவில்
  8. ஆய்க்குடி,அழகுநாச்சி அம்மன் கோவில்
  9. ஆய்க்குடி,அக்கறை சுடலை மாடசாமி கோவில்
  10. ஆய்க்குடி,புணமாலை சூடும் பெருமாள் என்ற கருத்தப்பாண்டி கோவில்
  11. ஆய்க்குடி உச்சி பிள்ளையார் கோவில்

 மேற்கோள்கள்

[தொகு]