ஆரத்தி பட்டாச்சார்யா | |
---|---|
ஆரத்தி, குணால் சிங் திருமண விழாவில் கலந்துகொண்ட சத்யஜித் ராய். | |
பிறப்பு | ஹீக்ளி (சுன்சுரா) |
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகை |
வாழ்க்கைத் துணை | குணால் சிங் (நடிகர், பிறப்பு 1955)[1][2] |
பிள்ளைகள் | ஆகாஷ் சிங் (நடிகர், பிறப்பு 1987) (மகன்) [3] |
ஆரத்தி பட்டாச்சார்யா(Arati Bhattacharya) [4] ஓர் இந்திய பெங்காலி நடிகை, எழுத்தாளர் மற்றும் இயக்குனர் ஆவார்.[5] பெங்காலி சினிமாவில் இவர் செய்த பணிக்காக அங்கீகரிக்கப்பட்டவர். உத்தம் குமார், சௌமித்ரா சாட்டர்ஜி மற்றும் அனில் சாட்டர்ஜி போன்ற நடிகர்களுடன் இவரது திரை ஜோடி பிரபலமானது. பின்னர் இவர், ஹிந்தி மற்றும் போஜ்புரி திரைப்படத் துறையில் வெற்றிகரமான திரைக்கதை எழுத்தாளராக இடம்பெயர்ந்தார்.
ஆரத்தி பட்டாச்சார்யா இந்தியாவின் ஜாம்ஷெட்பூரில் பிறந்தார். டி.எம். மதன் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் மெட்ரிகுலேஷன் தேர்ச்சி பெற்ற பிறகு, ஜாம்செட்பூர் மகளிர் கல்லூரியில் சேர்ந்தார், ஆனால் படிப்பை முடிக்க முடியவில்லை.
ஜாம்செட்பூரில் நடந்த கல்லூரி நாடகத்தில் சத்யா பந்தோபாத்யாயுடனான முதல் தற்செயலான சந்திப்பிற்குப் பிறகு, சத்யா பந்தோபாத்யாய் கொல்கத்தாவில் ஒரு நாடக கலைஞராக வந்து பணியாற்ற அழைத்தார். பின்னர் இவர் தனது தாயுடன் கொல்கத்தாவுக்குச் சென்று, சத்யா பந்தோபாத்யாய் எழுதி இயக்கிய 'கேயா' என்ற முக்கிய கதாபாத்திரத்தில் ரங்மஹால் தியேட்டரில் "நஹாபத்" நாடகத்தில் நாடகக் கலைஞராக தனது நடிப்பைத் தொடங்கினார்.[6] 1972 ஆம் ஆண்டு மிருணாள் சென் இயக்கிய "ஏக் அதுரி கஹானி" திரைப்படத்தில் முன்னணி நடிகையாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்த பிறகு 1970 களில் மறக்கமுடியாத பல பாத்திரங்களில் நடித்தார்.
ஆரத்தி பட்டாச்சார்யா, பிரேயசி, ஸ்திரீ, சூர்யத்ரிஷ்னா போன்ற படங்களுக்காக பிரபலமாக அறியப்பட்டவர். 1976இல், ஆனந்தமேளா திரைப்படத்தில் பாடகியாகவும் குரல் கொடுத்தார். இவர் சத்யஜித் ராயுடன் ஜன ஆரண்யாவில் [7] மேலும் மிருணாள் சென்னுடன் ஏக் அதுரி கஹானியில் பணியாற்றினார். 50க்கும் மேற்பட்ட பெங்காலி படங்களில் நடித்துள்ளார். இவரும் ஒரு கதக் நடனக் கலைஞராவார்.[8] இவர் சில இந்தி மற்றும் போஜ்புரி படங்களையும் இயக்கியுள்ளார். இப்போது போஜ்புரி திரையுலகில் ஒரு வெற்றிகரமான திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றி வருகிறார்.
போஜ்புரி நடிகரும் அரசியல்வாதியுமான குணால் சிங்கை மணந்தார். இவர்களது மகன் நடிகர் ஆகாஷ் சிங் .
பெங்கால் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் – அமி சே ஓ சகா (1976) [9] திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)