ஆரபி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 29வது மேளகர்த்தா இராகமும், "பான" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் ஐந்தாவது இராகமுமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும். பண்டைய தமிழிசைப் பண்களில் பழந்தக்கராகம் என்னும் பெயருடன் அழைக்கப்படுகிறது.[1]
இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த2), காகலி நிசாதம் (நி3), அந்தர காந்தாரம் (க3) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:
ஆரோகணம்: | ச ரி2 ம1 ப த2 ச் |
அவரோகணம்: | ச் நி3 த2 ப ம1 க3 ரி2 ச |