ஆராவ் (P003) மலேசிய மக்களவைத் தொகுதி பெர்லிஸ் | |
---|---|
Arau (P003) Federal Constituency in Perlis | |
ஆராவ் மக்களவைத் தொகுதி (P003 Arau) | |
மாவட்டம் | பெர்லிஸ் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 60,876 (2022) |
வாக்காளர் தொகுதி | ஆராவ் தொகுதி |
முக்கிய நகரங்கள் | கங்கார், ஆராவ், கொடியாங், |
பரப்பளவு | 222 ச.கி.மீ[1] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1974 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | சகிடான் காசிம் (Shahidan Kassim) |
மக்கள் தொகை | 97,332 (2020) |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1974 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[2] |
ஆராவ் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Arau; ஆங்கிலம்: Arau Federal Constituency; சீனம்: 亚娄国会议席) என்பது மலேசியா, பெர்லிஸ், மாநித்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P003) ஆகும்.[3]
ஆராவ் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1974-ஆம் ஆண்டில் இருந்து ஆராவ் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[4]
ஆராவ் (மலாய்: Arau) மலேசியா, பெர்லிஸ் மாநிலத்தில் உள்ள ஓர் அரச நகரம். பெர்லிஸ் மாநிலத்தின் தலைநகரமான கங்கார் நகரில் இருந்து தென்கிழக்காக 10 கி.மீ. தொலைவில் உள்ளது.
பெர்லிஸ் மன்னரின் அரண்மனையும் (Royal Palace), அரச பள்ளிவாலும் (Perlis State Mosque) இந்த நகரில் உள்ளன.
கோலாலம்பூரில் இருந்து தொடருந்து மூலமாக லங்காவி (Langkawi) தீவிற்குச் செல்ல விரும்பும் சுற்றுப் பயணிகள் ஆராவ் நகரில் இறங்கி, அதன் பின்னர் கோலா பெர்லிஸ் செல்கின்றனர். அங்கிருந்து லங்காவி தீவிற்குப் படகுகள் மூலமாகச் செல்ல வேண்டும்.
மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் இங்கு அமைந்துள்ளது. மாரா தொழில்நுட்பக் கழகம் என்று முன்பு அழைக்கப்பட்டது. 1999-ஆம் ஆண்டு பலகலைக்கழகத் தகுதியைப் பெற்றது. 2023-ஆம் ஆண்டில், இந்தப் பல்கலைக்கழகத்தில் 5974 மாணவர்கள் 37 கல்வித் துறைகளில் பயில்கின்றனர்.[5]
ஆராவ் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1974 - 2022) | |||
---|---|---|---|
நாடாளுமன்றம் | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1974-ஆம் ஆண்டில் ஆராவ் தொகுதி உருவாக்கப்பட்டது | |||
4-ஆவது மக்களவை | 1974–1978 | சையது அசன் சையது முகமது (Syed Hassan Syed Mohamed) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
5-ஆவது மக்களவை | 1978–1982 | ||
6-ஆவது மக்களவை | 1982–1986 | அப்துல் அமீத் பாவன்தே (Abdul Hamid Pawanteh) | |
7-ஆவது மக்களவை | 1986–1990 | சகிடான் காசிம் (Shahidan Kassim) | |
8-ஆவது மக்களவை | 1990–1995 | ||
9-ஆவது மக்களவை | 1995–1998 | கமருதீன் அகமது (Kamarudin Ahmad) | |
1998–1999 | அசீம் ஜாசின் (Hashim Jasin) |
மலேசிய இசுலாமிய கட்சி | |
10-ஆவது மக்களவை | 1999–2004 | மசுதிகா சூனைதா உசின் (Mastika Junaidah Husin) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
11-ஆவது மக்களவை | 2004–2008 | சையத் ரசுலான் சையத் புத்ரா ஜமல்லுல்லைல் (Syed Razlan Syed Putra Jamallullail) | |
12-ஆவது மக்களவை | 2008–2013 | இசுமாயில் காசிம் (Ismail Kassim) | |
13-ஆவது மக்களவை | 2013–2018 | சகிடான் காசிம் (Shahidan Kassim) | |
14-ஆவது மக்களவை | 2018–2022 | ||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது | பெரிக்காத்தான் நேசனல் (மலேசிய இசுலாமிய கட்சி) |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ∆% | |
---|---|---|---|---|---|
பெரிக்காத்தான் நேசனல் | சகிடான் காசிம் (Shahidan Kassim) |
31,458 | 67.23% | + 67.23% | |
பாரிசான் நேசனல் | ரோசாபில் அப்துல் ரகுமான் (Rozabil Abd Rahman) |
8,242 | 17.62% | - 24.17% ▼ | |
பாக்காத்தான் அரப்பான் | பாத்தின் அமெலினா பாசிலி (Fathin Amelina Fazlie) |
7,089 | 15.15% | - 14.37 % ▼ | |
செல்லுபடி வாக்குகள் (Valid) | 46,789 | 100% | |||
செல்லாத வாக்குகள் (Rejected) | 727 | ||||
ஒப்படைக்காத வாக்குகள் (Unreturned) | 88 | ||||
வாக்களித்தவர்கள் (Turnout) | 47,604 | 76.86% | - 7.05% ▼ | ||
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) | 60,876 | ||||
பெரும்பான்மை (Majority) | 23,216 | 49.61% | + 37.34% | ||
பெரிக்காத்தான் நேசனல் | வெற்றி பெற்ற கட்சி (Hold) | ||||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[6] |