2022இல் யார்க்சயர் அணிக்காக நூறு ஓட்டங்கள் அடித்த மகிழ்ச்சியினை வெளிப்படுத்தும் புரூக் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | ஆரி செரிங்டன் புரூக் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 22 பெப்ரவரி 1999 ஏடேல், மேற்கு யார்க்சயர், இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 183 cm (6 அடி 0 அங்) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | விரைவு வீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | மட்டையாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 707) | 8 செப்டம்பர் 2022 எ. South Africa | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 17 திசம்பர் 2022 எ. Pakistan | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 92) | 26 சனவரி 2022 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 13 நவம்பர் 2022 எ. Pakistan | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2016–தற்போது வரை | யார்க்சயர் (squad no. 88) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2021–தற்போது வரை | நார்தன் சூப்பர்சார்ஜஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2021/22 | ஓபர்டு அரிகேன்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2022 | லாகூர் கலாந்தர்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2023 | சன்ரைசர்ஸ் ஐதராபாத் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: Cricinfo, 15 திசம்பர் 2022 2022 |
ஆரி செரிங்டன் புரூக் அல்லது ஹாரி செரிங்டன் புரூக் (Harry Cherrington Brook பிறப்பு: பிப்ரவரி 22, 1999) ஓர் இங்கிலாந்து துடுப்பாட்ட அணி வீரர் ஆவார்,இங்கிலாந்துக்காக சர்வதேசப் போட்டிகளிலும், யார்க்சயர் மாகாணத் துடுப்பாட்ட அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளிலும் விளையாடுகிறார்.[1][2] வலது கை மட்டையாளரான, இவர் வலது கை விரைவு வீச்சாளர் ஆவார். சனவரி 2022இல் இங்கிலாந்துக்காக சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமானார் [3] .
புரூக் கீக்லியில் பிறந்தார், ஆனால் வார்ஃபெடேலில் உள்ள பர்லியில் வளர்ந்தார் .இவரது குடும்பத்தினர் சங்கத் துடுப்பாட்டப் போட்டிகளில் தீவிரமாக இருந்தனர்.[4]
மேற்கு யாக்சயரில் உள்ள இல்க்லியில் உள்ள பள்ளியில் கல்வி பயின்றார். 14ஆம் வயதில், கும்ப்ரியாவில் உள்ள உறைவிடப் பள்ளியான செட்பெர்க் பள்ளியில் பயில உதவித்தொகை பெற்றார்.[2][5][6] முன்னாள் தொழில்முறை துடுப்பாட்ட வீரரும், செட்பெர்க் பள்ளித் துடுப்பாட்டப் பயிற்சியாளருமான மார்ட்டின் இசுபெய்டு தனது பள்ளி நாட்களில் புரூக்கின் வாழ்க்கையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக பத்திரிகையாளர் அலெக்ஸ் மேசன் கிரிக்கெட்டர் இதழில் தெரிவித்தார்.[7]
புரூக் சூன் 26, 2016இல் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிராக ஹெடிங்லே துடுப்பாட்டத் திடலில் நடைபெற்ற முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் யார்க்சயர் அணிக்காக அறிமுகமானார்.[2][5][6][8]
ஆகஸ்ட் 2017இல் இந்தியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரில் இங்கிலாந்து 19 வயதுக்குட்பட்ட துடுப்பாட்ட அணியின் தலைவராக புரூக் இருந்தார்.
டிசம்பர் 2017இல், புரூக் 2018ஆம் ஆண்டிற்கான 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத்திற்கான இங்கிலாந்து அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார் .[9] இங்கிலாந்தின் இரண்டாவது குழுப் போட்டியில், வங்காளதேசத்திற்கு எதிராக, ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்கள் எடுத்தார், அலெஸ்டர் குக்கிற்குப் பிறகு U19 உலகக் கிண்ணத்தில் நூறு ஓட்டங்கள் அடித்த இரண்டாவது இங்கிலாந்துத் தலைவர் ஆனார்.[10] 239 ஓட்டங்களுடன் இங்கிலாந்து அணிக்காக அதிக ரன் குவித்தவர் ஆனார்.[11] பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை புரூக்கை அணியின் வளர்ந்து வரும் வீரராக அறிவித்தது.[12]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |date=
(help)