ஆரிப் முகமது கான் | |
---|---|
![]() | |
22வது கேரள ஆளுநர் | |
பதவியில் 6 செப்டம்பர் 2019 – 1 ஜனவரி 2025 | |
முன்னையவர் | ப. சதாசிவம் |
பின்னவர் | இராசேந்திர அர்லேகர் |
மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 1980 – 1984 | |
முன்னையவர் | மனோகர் லால் |
பின்னவர் | நரேஷ் சாந்தர் சதுர்வேதி |
தொகுதி | கான்பூர் |
பதவியில் 1984 – 1991 | |
முன்னையவர் | மவுலானா சையத் முசாபர் உசேன் |
பின்னவர் | ருத்ராசென் சவுத்ரி |
தொகுதி | பக்ரைச் |
பதவியில் 1998 – 1999 | |
முன்னையவர் | பதம்சன் சவுத்ரி |
பின்னவர் | பதம்சன் சவுத்ரி |
தொகுதி | பக்ரைச் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 18 நவம்பர் 1951 புலந்தசகர், உத்தரப் பிரதேசம், இந்தியா |
தேசியம் | ![]() |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி (2004 – தற்போதுவரை) |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு (1986 வரை) |
ஆரிப் முகமது கான் (Arif Mohammad Khan) (பிறப்பு: 18 நவம்பர், 1951) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது கேரள ஆளுநராக பணியாற்றி வருகிறார்.[1] இவர் முன்னாள் மத்திய அமைச்சர் ஆவார். குறிப்பாக எரிசக்தி மற்றும் சிவில் வானூர்தி போக்குவரத்து துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.[2]
ஆரிப் முகமது கான் 18 நவம்பர் 1951 அன்று புலந்த்சரில் பிறந்தார். டெல்லியின் ஜாமியா மில்லியா பள்ளியில் பள்ளிக் கல்வியும் அலிகர் இசுலாமிய பல்கலைக்கழகம், மற்றும் லக்னோ பல்கலைக்கழகத்தின் சினா கல்லூரியில் கல்வி பயின்றார் பட்டப் படிப்பை முடித்தார்.[3]
கான் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்தார், 1980 ஆம் ஆண்டு கான்பூர் தொகுதியிலிருந்தும் 1984 ஆம் ஆண்டு பக்ரைச் மக்களவை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் . கருத்து வேறுபாடுகள் காரணமாக 1986 ஆம் ஆண்டில் இவர் இந்திய தேசிய காங்கிரசிலிருந்து விலகினார்.
கான் ஜனதா தளத்தில் சேர்ந்தார், 1989 ல் மீண்டும் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜனதா தள ஆட்சியின் போது கான் மத்திய சிவில் விமான மற்றும் எரிசக்தி அமைச்சராக பணியாற்றினார்.
2004 ஆம் ஆண்டில் இவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தின் உத்தரவின் பேரில் கான் 1 செப்டம்பர் 2019 அன்று கேரள ஆளுநராக நியமிக்கப்பட்டார்.[4][5]