நலவாழ்வு உணவுக் கூம்பகம் என்பது ஹார்வர்டு பொது சுகாதார பள்ளிால் உருவாக்கப்பட்ட ஒரு ஊட்டச்சத்து வழிகாட்டியாகும், ஒவ்வொரு மனிதனும் தினமும் சாப்பிட வேண்டிய ஒவ்வொரு உணவு வகைகளின் அளவு குறித்து வழிகாட்டுவதாக இது உள்ளது.[1] ஆரோக்கிய உணவுக் கூம்பகமானது அமெரிக்க ஐக்கிய நாட்டின் வேளாண்மை துறையால் உருவாக்ப்பட்ட பரவலான உணவு வழிகாட்டியான உணவுக் கூம்பகத்தைவிட சத்துண உணவை உண்ண வழிகாட்டும் நோக்கம் உடையதாகும்.
புதிய கூம்பகத்தின் நாேக்கம் என்னவென்றால், 1992 இல் முதன்முதலாக அமெரிக்க ஐக்கிய நாட்டின் வேளாண்மை துறை வடிவமைத்த வழிகாட்டியில் உள்ளதைப் பாேல் இல்லாமல் சமீபத்திய ஆய்வுகளை உள்ளடக்கியதாக உள்ளது ஆகும். அந்த பழைய கூம்பகத்தில் சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள், முழு தானியங்கள் மற்றும் நிறைவுற்ற கொழுப்பு, குறைக்கப்படாத கொழுப்பு பாேன்றவைகளுக்கு இடையில் உள்ள வேறுபாட்டைக் கூறாமை, உடற்பயிற்சி, எடை கட்டுப்பாடு போன்ற கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமைக்காக விமர்சிக்கப்பட்டது.