ஆரோன் ஆல்ஃபேகர் (Aaron Halfaker) (/ˈhæfeɪkər/; பிறப்பு திசம்பர் 27, 1983) என்பவர் ஒரு அமெரிக்க கணிணி அறிவியலாளர் மற்றும் விக்கிமீடியா நிறுவனத்தின் முதன்மை ஆய்வு விஞ்ஞானியுமாக 2020 வரை பணியாற்றியவரும் ஆவார்.[2][3][4]
ஆல்ஃபேகர் 2006 ஆம் ஆண்டில் செயின்ட் ஸ்கொலஸ்டிகா கல்லூரியில் கணினி அறிவியலில் பட்டம் பெற்றார், அங்கு அவர் ஒரு உடலியக்க சிகிச்சை பிரிவை தனது முதன்மைப் படிப்பாக படிக்கத் தொடங்கினார். ஆனால் இணை பேராசிரியர் டயானா ஜான்சன் ஒரு நிரலாக்க வகுப்பை எடுத்த பிறகு கணினி அறிவியலுக்கு மாறினார்.[5] பின்னர், 2013 ஆம் ஆண்டில் மினசோட்டா பல்கலைக்கழகத்தில் குரூப்லென்ஸ் ஆராய்ச்சி ஆய்வகத்திலிருந்து கணினி அறிவியலில் முனைவர் பட்டத்தைப் பெற்றார். விக்கிபீடியா மற்றும் அதன் தளத்தின் செயலில் உள்ள முனைப்பான பங்களிப்பாளர்களின் எண்ணிக்கை குறைதல் குறித்த அவரது ஆய்வுக்காக அறியப்பட்டவரானார்.[6][7][8] 2007 ஆம் ஆண்டில் விக்கிபீடியா ஒரு "சரிவு கட்டத்தை" தொடங்கியது என்றும், அதன் பின்னர் இது தொடர்ந்து குறைந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.[9][10] விக்கிப்பீடியாவில் போட்ஸ் என அழைக்கப்படும் தானியங்கி கணக்குகளையும் மேலும் அவை தளத்திற்கு புதிய பங்களிப்பாளர்களை பாதிக்கும் விதம் குறித்தும் ஆல்ஃபேகர் ஆய்வு செய்துள்ளார்,[2][11] ஒரு பட்டதாரி மாணவராக இருந்தபோது, அவர், ஸ்டூவர்ட் கீகருடன் சேர்ந்து, விக்கிபீடியா தொகுப்பிற்கான " ஸ்னகல் " என்ற கருவியை உருவாக்கினார், இதன் குறிக்கோள் விக்கிப்பீடியாவில் காழ்ப்புணர்ச்சியுடன் செய்யப்படும் தொகுப்புகள் மற்றும் கழிவுகளை அகற்றுவதும், புதிய ஆசிரியர்களின் ஆக்கபூர்வமான பங்களிப்புகளை முன்னிலைப்படுத்துவதும் ஆகும்.[12][13] விக்கிபீடியாவில் காழ்ப்புணர்ச்சியைக் கண்டறிந்து அதை நல்ல நம்பிக்கையுடன் மேற்கொள்ளப்படும் திருத்தங்களிலிருந்து வேறுபடுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் "குறிக்கோள் திருத்த மதிப்பீட்டு சேவை" (அல்லது சுருக்கமாக ORES) எனப்படும் ஒரு செயற்கை நுண்ணறிவு இயந்திரத்தையும் அவர் உருவாக்கியுள்ளார்.[14][15]
↑Halfaker, A.; Geiger, R. S.; Morgan, J. T.; Riedl, J. (28 December 2012). "The Rise and Decline of an Open Collaboration System: How Wikipedia's Reaction to Popularity Is Causing Its Decline". American Behavioral Scientist57 (5): 664–688. doi:10.1177/0002764212469365.
↑Simonite, Tom (22 October 2013). "The Decline of Wikipedia". MIT Technology Review. Archived from the original on 19 ஜூன் 2015. பார்க்கப்பட்ட நாள் 13 March 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)