ஆர். எஸ். சிவாஜி | |
---|---|
பிறப்பு | சென்னை, சென்னை மாநிலம், இந்தியா | 26 அக்டோபர் 1956
இறப்பு | 2 செப்டம்பர் 2023 சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 66)
பணி | நடிகர், இணைத்தயாரிப்பாளர், ஒலிப்பதிவாளர் |
பெற்றோர் | எம். ஆர். சந்தானம், இராஜலட்சுமி |
ஆர். எஸ். சிவாஜி (26 அக்டோபர் 1956 – 2 செப்டம்பர் 2023)[1]) என்பவர் இந்திய திரைப்பட நடிகராவார். குறிப்பாக இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடித்ததற்காக அறியப்படுகிறார். கமல்ஹாசன் மற்றும் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சம்பந்தப்பட்ட படங்களில் இவர் மிகுதியாக நடித்துள்ளார். இவர் உதவி இயக்குநராகவும், ஒலி வடிவமைப்பாளராகவும், லைன் புரொடியூசராகவும் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.[2][3][4]
எல்லிஸ் ஆர். டங்கனின் மீரா (1945) உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய நடிகரும் தயாரிப்பாளருமான எம். ஆர். சந்தானத்தின் மகன்தான் ஆர். எஸ். சிவாஜி. இவரது சகோதரரான சந்தான பாரதியும் பிரபல நடிகரும், திரைப்பட இயக்குநரும் ஆவார், இவர் தமிழ்த் திரைப்படத் துறையில் பணியாற்றிவருகிறார்.[5]
சிவாஜி முதன்மையாக நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். 1980 கள் மற்றும் 1990 களில் கமல்ஹாசனின் படங்களில் தவறாமல் நடித்தார். இவர் சார்! நீங்க எங்கயோ போயிட்டீங்க என்று அபூர்வ சகோதரர்கள் (1989) படத்தில் சனகராஜை பார்த்துப் பேசிய வசனம் புகழ்பெற்றது. பின்னர் பல தமிழ்த் திரைப்படங்களில் இந்த வசனத்தைக் கொண்டு கேலிசெய்யப்பட்டு வருகிறது.[6] இவர் முறையே நயன்தாராவின் தந்தையாக கோலமாவு கோகிலா படத்திலும், விவேக்கின் உதவியாளராக தாராள பிரபு படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.[7][8]
ஆண்டு | நிரல் பெயர் | பாத்திரம் | வலைப்பின்னல் | குறிப்புகள் |
---|---|---|---|---|
2020 | டைம் என்ன பாஸ் | ரூம் ஜஹாம் | அமேசான் பிரைம் | [9] |