ஆர். கிருஷ்ணமூர்த்தி | |
---|---|
மற்ற பெயர்கள் | பில்லா கிருஷ்ணமூர்த்தி |
பணி | இயக்குநர் |
ஆர். கிருஷ்ணமூர்த்தி (R. Krishnamoorthy) என்பவர் இந்தியத் தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றிய திரைப்பட இயக்குநரும், திரைக்கதை ஆசிரியருமாவார். 1980 களில் மிகவும் சுறுசுறுப்பான, இயக்குநராக இருந்த இவர் இரசினிகாந்த்தின் பில்லா (1980), கமல் ஹாசனின் வாழ்வே மாயம் (1982) போன்ற குறிப்பிடத்தக்க படங்களை இயக்கினார்.[1][2][3]
கிருஷ்ணமூர்த்தி தன் தொழில் வாழ்க்கை முழுவதும், கே. பாலாஜி, சுரேஷ் பாலாஜே மற்றும் அவர்களின் சுரேஷ் ஆர்ட்ஸ் பதாகையின் கீழ் தயாரிக்கப்பட்ட படங்களிலேயே தொடர்ந்து பணியாற்றினார்.
இரசினிகாந்து நடித்த பில்லா (1980) திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இயக்குநரான இவர் திரைப்படத் துறையில் "பில்லா" கிருஷ்ணமூர்த்தி என்று பரவலாக அழைக்கப்பட்டார்.[4][5][6] பின்னர் கமல் ஹாசனுடன் சவால் (1981), வாழ்வே மாயம் (1982) உள்ளிட்ட படங்களில் பணியாற்றினார். பின்னர் மீண்டும் இரசினிகாந்துடன் தீ (1981) படத்தில் பணியாற்றினார்.
1980 களில், இவர் சிவாஜி கணேசன் அவரது மகன் பிரபு ஆகியோருடன் நீதிபதி (1983), திருப்பம் (1984), நியாயம் (1984) உள்ளிட்ட பல படங்களை உருவாக்கினார்.[7][8]
ஆண்டு | படம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|
1978 | ராதைக்கேற்ற கண்ணன் | தமிழ் | |
1979 | அமர் தீப் | இந்தி | |
1980 | பில்லா | தமிழ் | சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருதுக்கு (தமிழ்) பரிந்துரைக்கப்பட்டது. |
1981 | சவால் | தமிழ் | |
1981 | தீ | தமிழ் | |
1982 | முறைப் பொண்ணு | தமிழ் | |
1982 | வாழ்வே மாயம் | தமிழ் | |
1982 | தீர்ப்பு | தமிழ் | |
1983 | நீதிபதி | தமிழ் | |
1983 | இமைகள் | தமிழ் | |
1983 | ஜஸ்டிஸ் ராஜா | மலையாளம் | |
1984 | திருப்பம் | தமிழ் | |
1984 | வம்ச விளக்கு | தமிழ் | |
1984 | நெருப்புக்குள் ஈரம் | தமிழ் | |
1984 | நியாயம் | தமிழ் | |
1985 | நேர்மை | தமிழ் | |
1985 | தெய்வப்பிறவி | தமிழ் | |
1985 | நாம் இருவர் | தமிழ் | |
1986 | அன்னை என் தெய்வம் | தமிழ் | |
1987 | தங்கச்சி | தமிழ் | |
1987 | தாய் பாசம் | தமிழ் | |
1988 | பொன்னனியத்தி | மலையாளம் | |
1989 | திராவிடன் | தமிழ் | |
1990 | வாழ்ந்து காட்டுவோம் | தமிழ் | |
1991 | வெற்றிக்கரங்கள் | தமிழ் | |
1993 | கற்பகம் வந்தாச்சு | தமிழ் |