ஆர். கே. ஸ்ரீகண்டன் | |
---|---|
![]() | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | சனவரி 14, 1920 |
இறப்பு | பெப்ரவரி 17, 2014 | (அகவை 94)
இசை வடிவங்கள் | கருநாடக இசை |
ஆர். கே. ஸ்ரீகண்டன் (R. K. Srikantan) (சனவரி 14 1920 - பெப்ரவரி 17 2014 )[1][2] தென்னிந்தியாவைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார்.
கர்நாடக மாநிலத்தின் ருத்ரபட்டணம் எனும் ஊரில் பிறந்தவர். இவரின் தந்தை ஆர். கிருஷ்ணசாஸ்த்ரி ஹரிகதை வித்துவான் ஆவார். ஸ்ரீகண்டனின் தாத்தா நாராயணசுவாமி என்பவர் ஒரு வீணையிசைக் கலைஞராவார். ஆரம்பத்தில் தந்தையாரிடம் இசையினைக் கற்ற ஸ்ரீகண்டன் பின்னர் தனது சகோதர் ஆர். கே. வேங்கடராம சாஸ்த்ரியிடம் மேற்கொண்டு இசையினைக் கற்றுக்கொண்டார். மைசூரிலுள்ள பனுமையா உயர்பள்ளியில் பள்ளிக்கல்வியினை முடித்தபிறகு, மைசூரின் மகாராஜா கல்லூரியில் பி.ஏ., பட்டம் பெற்றார்.
அரியக்குடி இராமானுஜ ஐயங்கார், முசிரி சுப்பிரமணிய ஐயர், மைசூர் வாசுதேவாசார், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் போன்ற அக்காலத்து புகழ்பெற்ற இசைக் கலைஞர்களிடம் பாடம் கேட்டு தன்னை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டார் ஸ்ரீகண்டன்.
ஸ்ரீகண்டன் பெப்ரவரி 17, 2014 அன்று பெங்களூரில் காலமானார்[3].
இவரின் பாட்டுமுறை, நாகசுவர பாணியில் அமைந்திருந்ததாக இசை விமரிசகர்கள் கருதுகிறார்கள். அதிக அளவு நாகசுவர இசையினை இவர் கேட்டு வளர்ந்ததே இதற்குக் காரணம் என கருதப்படுகிறது.
இவரின் 60 ஆண்டுகளுக்கும் மேலான இசைப்பணியில், இரண்டு மணி நேரக் கச்சேரியைத் தனது 92-வது வயதிலும் ஸ்ரீகண்டனால் தர முடிந்தது.[4][5]
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
and |date=
(help)
'நாத முனி' எனும் தலைப்பிலமைந்த கட்டுரை (பக்கம் எண்: 32), தினமணி இசைவிழா மலர் (2011-2012)