சர் ஆர்க்கிபால்ட் டென்னிஸ் பிளவர் (Archibald Dennis Flower) (31 அக்டோபர் 1865 - 23 நவம்பர் 1950) ஒரு ஆங்கில பொது சேவகர் ஆவார்.மேலும் சேக்சுபியர் பிறப்பிட அறங்காவலர் மற்றும் பாதுகாவலர் என்னும் அறக்கட்டளைக்கும் சேக்சுபியர் நினைவு அரங்கம் எனும் அமைப்பிற்கும் தலைவராக இருந்தவர்.[1][2]
பிளவர் 1865 ஆம் ஆண்டில் எட்கர் ஃப்ளவர் மற்றும் அவரது மனைவி இசபெல்லா சோபியாவின் மகனாகப் பிறந்தார். அவர் எட்வர்ட் ஃபோர்டாம் பிளவர் என்பவரின் பேரன் ஆவார். அவர் பெட்ஃபோர்ட் மாடர்ன் ஸ்கூல் மற்றும் கேம்பிரிட்ஜ்ஜில் உள்ள கிளேர் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார், அங்கு அவர் படகுப் பந்தயத்தில் பங்கேற்றார்.[1]
1892 ஆம் ஆண்டில் வார்விக்ஷயர் கவுண்டி எனும் அமைப்பிற்கு பிளவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1900 ஆம் ஆண்டில் அவர் சேக்சுபியரின் பிறப்பிடத்தின் அறங்காவலர்கள் மற்றும் பாதுகாவலர்கள் என்னும் அறக்கட்டளைக்கும் ஷேக்ஸ்பியர் நினைவு அரங்கு எனும் அமைப்பிற்கும் தலைவரானார். 1900-02, 1915-18 மற்றும் 1931_ ஆகிய ஆண்டுகளில் அவர் ஸ்ட்ராட்போர்டு-அப்-அவான் எனும் நகரின் மாநகராட்சி மன்றத் தலைவராக இருந்தார்.[1]
பிளவர் சர் ரிச்சர்ட் கீன் என்பவரின் மகள் புளோரன்ஸ் என்பவரை மணந்தார்.[1] அவர்களுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். 1950ல் ஸ்ட்ராட்போர்டில் உள்ள அவரது வீட்டில் மரணமடைந்தார்.[3]