ஆர்சனியோசிடரைட்டு

ஆர்சனியோசிடரைட்டு
Arseniosiderite
ஆர்சனியோசிடரைட்டு, அளவு: 6.4×6.2×5.6 மி.மீ
பொதுவானாவை
வகைஆர்சனேட்டு கனிமம்
வேதி வாய்பாடுCa2Fe3+3(AsO4)3O2•3H2O
இனங்காணல்
மோலார் நிறை766.50 கி/மோல்
நிறம்வெங்கலப் பழுப்பு; மஞ்சள் கலந்த கருப்பு
படிக இயல்புஇழை
படிக அமைப்புஒற்றைச்சரிவு
பிளப்பு{100} நன்று
மோவின் அளவுகோல் வலிமை4.5
மிளிர்வுஉலோகக் குறைவு பளபளப்பு
கீற்றுவண்ணம்வெளிறிய பழுப்பு
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது அல்லது கசியும்
ஒப்படர்த்தி3.5–3.9, சராசரி = 3.7
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (-)
ஒளிவிலகல் எண்nα = 1.815, nβ = 1.898, nγ = 1.898
இரட்டை ஒளிவிலகல்δ = 0.083
பிற சிறப்பியல்புகள்ஒளிராது
மேற்கோள்கள்[1][2][3]

ஆர்சனியோசிடரைட்டு (Arseniosiderite) என்பது Ca2Fe3+3(AsO4)3O2·3H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஒர் அரியவகை ஆர்சனேட்டு கனிமமான இது சிகோரோடைட்டு அல்லது ஆர்சனோபைரைட்டு போன்ற ஆர்சனிக்கை கொண்டுள்ள கனிமங்களின் ஆக்சிசனேற்ற வினையினால் உருவாகிறது.

பியூதாண்டைட்டு, கார்மினைட்டு, துசெர்டைட்டு, பார்மாகோலைட்டு, பிட்டிசைட்டு, அடமைட்டு, எரித்ரைட்டு போன்ற கனிமங்களுடன் சேர்ந்து ஆர்சனியோசிடரைட்டு தோன்றுகிறது[3]. கனிமத்தின் பெயரிலிருந்தே இதன் உட்கூறுகளாக ஆர்சனிக்கும் இரும்பும் உள்ளன என்பதை அரிய முடியும். கிரேக்க மொழியில் சிடரோசு என்ற சொல்லின் பொருள் இரும்பாகும்.

பன்னாட்டு கனிமவியலாளர் சங்கம் ஆர்சனியோசிடரைட்டு கனிமத்தை Assd[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Arseniosiderite. Mindat.org
  2. Arseniosiderite. Webmineral.com
  3. 3.0 3.1 Arseniosiderite. Handbook of mineralogy
  4. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.