பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
Orthonitrate
| |
இனங்காட்டிகள் | |
54991-46-7 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
NO43- | |
வாய்ப்பாட்டு எடை | 78.006 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஆர்த்தோ நைட்ரேட்டு (Orthonitrate) என்பது NO43- என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட நைட்ரசனின் நான்முகி வடிவ [[ஆக்சோ எதிர்மின்னயனியாகும். முதன்முதலில் 1977[1] ஆம் ஆண்டில் இவ்வயனி கண்டறியப்பட்டது. தற்பொழுது சோடியம் ஆர்த்தோநைட்ரேட்டு மற்றும் பொட்டாசியம் ஆர்த்தோ நைட்ரேட்டு என்ற இரண்டு சேர்மங்களில் மட்டும் காணப்படுவதாக அறியப்படுகிறது. உயர் வெப்பநிலை[2] மற்றும் உயர் அழுத்தத்தில் [2]நைட்ரேட்டு மற்றும் உலோக ஆக்சைடுகளை வினைபுரியச் செய்து ஆர்த்தோ நைட்ரேட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.
வினையில் விளைகின்ற ஆர்த்தோ நைட்ரேட்டுகள் வெண்மை நிறத் தின்மமாகக் காணப்படுகின்றன. இவை ஈரப்பதம் மற்றும் கார்பன் டை ஆக்சைடு போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றன. காற்றில் பட நேர்ந்தால் சிலநிமிடங்களில் கார்பனேட்டு மற்றும் ஐதராக்சைடுகளாகச் சிதைவடைகின்றன.[1]
ஆர்த்தோ நைட்ரேட்டு அயனிகள் நான்முகி வடிவில் N-O பிணைப்புகள் 139 பைக்கோ மீட்டர் நீளத்துடன் காணப்படுகின்றன. இக்குறுகிய நீளமானது பிணைப்பை அதிக ஆற்றலால் dπ ஆர்பிட்டால் நிலைக்கு குறைக்கின்றன.