ஆறன்முளா பன்னாட்டு வானூர்தி நிலையம் International Airport | |
---|---|
சுருக்கமான விபரம் | |
வானூர்தி நிலைய வகை | தனியார் |
உரிமையாளர் | கேஜியெஸ் பிரைவேட் லிமிடெட் |
இயக்குனர் | கேஜியெஸ் ஆறன்முளா பன்னாட்டு வானூர்தி நிலையம் லிமிடெட். |
சேவை புரிவது | பந்தனம்திட்டா, கோட்டயம், ஆலப்புழை, இடுக்கி |
அமைவிடம் | ஆறன்முளா, கேரளம், இந்தியா |
ஆள்கூறுகள் | 09°19′23″N 076°41′11″E / 9.32306°N 76.68639°E |
ஆறன்முளா பன்னாட்டு வானூர்தி நிலையம், கேரள மாநிலத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஆறன்முளா நகரில் அமைக்கப்படவிருக்கும் வானூர்தி நிலையம் ஆகும். இதற்கான செலவு 2,000 கோடி இந்திய ரூபாய் எனவும், 700 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. [1] பலராலும் எதிர்க்கப்பட்டாலும், இதன் மூலம் 7500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது> [2] இது 2014 டிசம்பர் இறுதியில் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. போயிங் 747 உள்ளிட்ட பெரிய வானூர்திகளை நிறுத்துமளவுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்படும்.[3] ஒரே வேளையில் ஆயிரம் பேரை தாங்கும் அளவுக்கு முனையமும், பேரங்காடிகளும் அமைக்கப்படவுள்ளன.