ஆறாம் கேரள வர்மா (Kerala Varma VI) ( 1863 - 13 அக்டோபர் 1943) இவர் 23 மே 1941 முதல் 23 அக்டோபர் 1943 வரை கொச்சி இராச்சியத்தின் ஆட்சியாளராக இருந்தார்.
பதினெட்டாம் இராமர்மாவின் இறப்பிற்குப் பின் இவர் அரியணை ஏறினார். பதினாறாம் இராம வர்மாவின்தம்பியான இவர் பிரபலமாக மிதுக்கன் தம்புரான் என்று அழைக்கப்பட்டார். இவருடைய ஆட்சியின் போது தான் ஒரு இந்திய சுதேச மாநிலத்தில் முதல் முறையாக உணவு விநியோக முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இவர் ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த அறிஞராக இருந்தார்.
இவர், மிதுக்கன் தம்புரான் என்று பிரம்பலமாக அறியப்பட்டார். இவரது அவரது மனைவி இலட்சுமிகுட்டி நேத்தியாரம்மா இராதா லட்சுமி விலாச இசை நிறுவனத்தை நிறுவினார். இது இன்று திருப்பூணித்துறையில் ஆர்.எல்.வி இசை மற்றும் நுண்கலை கல்லூரியாக மாறியுள்ளது. இவர்களுக்கு கிருஷ்ண மேனன், கிரிஜவல்லபன் மேனன், ரகுநந்தனன் மேனன் மற்றும் சுகுமார மேனன் என்ற நான்கு மகன்களும், இராதா என்ற ஒரு மகளும் இருந்தனர். [1] இராணுவத்தில் தளபதி பதவியில் இருந்த இவரது நான்காவது மகன் சுகுமார மேனன், மராயில் நானு மேனனின் மகள் பாரதி குட்டி என்பவரை மணந்தார். [2]
இவர் திருப்பூணித்துறையில் 1943 அக்டோபர் 23 அன்று இறந்தார்.