ஆறுமுகன் தொண்டமான் | |
---|---|
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் | |
பதவியில் 1999 – மே 26, 2020 | |
முன்னையவர் | சௌமியமூர்த்தி தொண்டமான் |
இலங்கை நாடாளுமன்றம் நுவரெலியா மாவட்டம் | |
பதவியில் 16 ஆகத்து 1994 – 02 மார்ச் 2020 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 29 மே 1964 |
இறப்பு | 26 மே 2020 தலங்கமை மருத்துவமனை, சிறீ ஜெயவர்தனபுர கோட்டை | (அகவை 55)
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் |
பிற அரசியல் தொடர்புகள் | இலங்கை பொதுசன முன்னணி |
உறவுகள் | சௌமியமூர்த்தி தொண்டமான் |
பிள்ளைகள் | நாச்சியார் விஜி ஜீவன் தொண்டமான் |
வாழிடம்(s) | யாவத்தை வீதி, கொழும்பு 05 |
முன்னாள் கல்லூரி | கொழும்பு றோயல் கல்லூரி |
வேலை | அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி |
சௌம்யமூர்த்தி ஆறுமுகன் ராமநாதன் தொண்டமான் அல்லது ஆறுமுகன் தொண்டமான் (Savumiamoorthy Arumugan Ramanathan Thondaman, மே 29, 1964 - மே 26, 2020) இலங்கையின் மலையகத் தமிழ் அரசியல்வாதியும், தொழிற்சங்கத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் கால்நடைவள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சரும் ஆவார். இவர் முன்னாள் அமைச்சரும் தொழிற்சங்கவாதியுமான சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரன் ஆவார்.[1] இவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும் இறக்கும் வரை பதவியில் இருந்தார்.[2] இவர் 2020 மே 26 இரவு தனது இல்லத்தில் மாரடைப்பால் காலமானார். இவர் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை பொதுசன முன்னணியின் சார்பில் போட்டியிடவிருந்தார்.[3][4]
ஆறுமுகன் தொண்டமான் 1990ம் ஆண்டு இ.தொ.காவில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 1993 ஆம் ஆண்டு இ.தொ.காவில் நிதிச் செயலாளராகவும், 1994 ஆம் ஆண்டு பொதுச் செயலாளராகவும் பதவியேற்றார். முதற் தடவையாக 1994 நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு 74,000 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் சென்றார். அதன் பின்னர் 2000, 2004 தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார்.