ஆற்காடு வட்டம்

ஆற்காடு வட்டம் , தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டப் பகுதிகளைக் கொண்டு 28 நவம்பர் 2019 அன்று புதிதாக நிறுவப்பட்ட இராணிப்பேட்டை மாவட்டத்தின் 6 வட்டங்களில் ஒன்றாகும்.[1]இந்த வட்டத்தின் தலைமையகமாக ஆற்காடு நகரம் உள்ளது.

ஆற்காடு வட்டத்தின் கீழ் ஆற்காடு, திமிரி, புதுப்பாடி என 3 உள்வட்டங்களும், 65 வருவாய் கிராமங்களும் உள்ளன.[2]

டிசம்பர் 2020 இல் ஆற்காடு வட்டத்தின் பகுதிகளைக் கொண்டு புதியதாக கலவை வட்டம் மற்றும் சோளிங்கர் வட்டம் உருவாக்கப்பட்டது.[3]

இவ்வட்டத்தில் ஆற்காடு ஊராட்சி ஒன்றியம், கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம் மற்றும் திமிரி ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை 250,517 ஆகும். அதில் 124,705 ஆண்களும், 125,812 பெண்களும் உள்ளனர். 61,730 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 60.8% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 78.92% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,009 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 26,269 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 941 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 58,355 மற்றும் 1,990 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 93.68%, இசுலாமியர்கள் 5.25% , கிறித்தவர்கள் 0.8% மற்றும் பிறர் 0.27% ஆகவுள்ளனர்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. வேலூர் மாவட்ட வருவாய் வட்டங்கள்
  2. ஆற்காடு வட்டத்தின் வருவாய் கிராமங்கள்
  3. "Sholinghur and Kalavai taluk offices of Ranipet dist inaugurated". Archived from the original on 2020-01-03. பார்க்கப்பட்ட நாள் 2020-01-03.
  4. ஆற்காடு வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்