ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனம் (Institute for Energy and Environmental Research) 1987 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்திலுள்ள டகோமா பூங்காவில் இந்நிறுவனம் அமைந்துள்ளது. அணு ஆயுத உற்பத்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஓசோன் அடுக்கு குறைவு மற்றும் ஆற்றல் தொடர்பான பிற பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்துகிறது. [1] ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனம் ஆற்றல் தொடர்பான பிரச்சினைகள் குறித்த பல்வேறு புத்தகங்களை வெளியிடுகிறது. [2][3] அணுசக்தி பிரச்சினைகள் குறித்த ஆர்வலர்களுக்கான பட்டறைகளை நடத்துகிறது. மேலும் பன்னாட்டளவில் நடைபெறும் கருத்தரங்குகளுக்கும் கல்வி மேம்பாட்டு திட்டங்களுக்கும் நிதியுதவி செய்கிறது. [1]
தற்போது அர்ச்சூன் மகியானி ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.